செய்தி

இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் பூதவுடல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வௌிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 4 மணி வரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 30ஆம் திகதி காலமானார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!