ஐரோப்பா

பிரித்தானியா – வேல்ஸில் சிவப்பு அறிவித்தலை வெளியிட்ட 03 முக்கிய மருத்துவமனைகள்!

வேல்ஸில் மூன்று மருத்துவமனைகள் சிவப்பு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளன.

இதன்படி Llantrisant இல் உள்ள Royal Glamorgan மருத்துவமனை, Merthyr Tydfil இல் உள்ள பிரின்ஸ் சார்லஸ் மருத்துவமனை மற்றும் Princess of Wales Hospital in Bridgend ஆகிய மருத்துவமனைகள் இந்த சிவப்பு அறித்தலை வெளியிட்டுள்ளன.

குறித்த மருத்துவமனைகளில் அவசர சேவை பிரிவு, விபத்து பிரிவு ஆகியன துரிதமாக செயற்படுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே முடிந்தவரை மக்கள் பிற மருத்துவமனைகளை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கு சிறந்த மருத்துவ உதவியை பெறுவது என்பது தெரியாவிட்டால் 111 என்ற NHS இன் தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தீவிர அழுத்தத்தில் உள்ளன.

பல் மருத்துவர், கண் மருத்துவர் போன்ற பிற சுகாதார சேவைகளைப் பார்க்கும் வரை காத்திருக்க முடியாத அவசரநிலை இருந்தால் மட்டுமே எங்கள் ED இல் கலந்துகொள்ளவும்.

நீங்கள் ஒரு கணிசமான நேரம் காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். எங்களுடைய ஊழியர்கள் முடிந்தவரை பல நோயாளிகளைப் பராமரிக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்