எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது
டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண திருத்தச் சூத்திரத்தின் பிரகாரம் டீசல் விலை குறைப்பு பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு போதாது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
விலைச் சூத்திரத்தின்படி பஸ் கட்டணத்தை குறைப்பதாக இருந்தால் டீசல் விலை குறைந்தது ஐம்பத்தைந்து ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும் எனவும் விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஜூலை 1 ஆம் திகதி எரிபொருள் விலை குறைவினால் மக்கள் பயனடைய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)