இலங்கையில் அதிர்ச்சி – குடும்ப தகராறு காரணமாக குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்

இலங்கையில் குடும்ப தகராறு காரணமாக தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின. தாய் மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக குழந்தை தாயினால் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை காணவில்லை என கணவர் தேடிய நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)