இலங்கையில் இளைஞனுடன் ஹோட்டலுக்கு சென்ற யுவதி மர்மமான முறையில் மரணம்
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.