இந்தியா

இந்தியாவுடனான உறவு தொடரும்: ரஷ்யா திட்டவட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

தமது நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடமிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என ரஷ்யா Russia தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் Dmitry Peskov மேற்படி தகவலை வெளியிட்டார். “ இந்தியாவுடனான India உறவை அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்படுத்தவே ரஷ்யா விரும்புகிறது” எனவும் அவர் கூறினார். அதேவேளை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தின் 78 வது சுதந்திர தின நிகழ்வு! ஆளுநரின் உரை!!

  • February 4, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அணிவகுப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் திணைகள அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 78 வது சுதந்திர தின நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு உரை நிகழ்த்தினார். ”இம்முறை அரசாங்கத்தின் தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் […]

இந்தியா

மணிப்பூரில் புதிய முதல்வர் விரைவில் பதவியேற்பு!

  • February 4, 2026
  • 0 Comments

மணிப்பூர் Manipur மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.கவின் BJP யுத்நம் கேம்சந்த் சிங் udhnam Khemchand Singh பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீடிடிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் இரு சமூகத்தினரிடையே இனக்கலவரம் வெடித்தது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பெப்ரவரி மாதம் பாஜகவை […]

செய்தி

இங்கிலாந்தில் புற்றுநோய் மருந்து உட்பட 400 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

  • February 4, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் புற்றுநோய் மற்றும் பக்கவாத மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி மருந்துகள், இரத்த உறைவு சிகிச்சைகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான (schizophrenia)  மருந்துகள் உட்பட  378 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக NHS பட்டியலிட்டுள்ளது. இந்த சூழ்நிலை மருத்துவர்கள் நோயாளிகளை குணப்படுத்த மாற்று வழிகளை கண்டுப்பிடிக்க கட்டாயப்படுத்தும் என்றும், தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. NHS இங்கிலாந்தின் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 80 மருந்துகள் உற்பத்தியாளர் இல்லாத மருந்துகளாகும், அதாவது […]

ஐரோப்பா

பிரான்ஸில் 14 வயது மாணவரின் வெறிச் செயல் – உயிருக்கு போராடும் ஆசிரியர்!

  • February 4, 2026
  • 0 Comments

பிரான்ஸின் சனரி-சுர்-மெரில்  (Sanary-sur-Mer) உள்ள ஒரு பாடசாலையில் 60 வயதுடைய  ஆசிரியர் ஒருவர் மாணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதான குறித்த மாணவர் ஆசிரியரை பலமுறை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் உடலில் 03 அல்லது 04 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர் ரபேல் பாலண்ட் (Raphael Balland) தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தாக்குதல்தாரியான மாணவர் கொலைமுயற்சி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் தடுத்து […]

உலகம்

ஈரான்மீது ஆஸ்திரேலியா நிதித்தடை விதிப்பு!

  • February 4, 2026
  • 0 Comments

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவரும் ஆஸ்திரேலியா, அந்நாடுமீது மேலதிக நிதித் தடைகளையும் அறிவித்துள்ளது. ஈரான் மக்கள்மீது அந்நாட்டு அரசால் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியே புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை அதிகாரிகள் 20 பேர் மற்றும் 3 நிறுவனங்களுக்கே நிதித்தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் இணைய முடக்கத்திற்கு எதிராக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கையை […]

இலங்கை செய்தி

இனவாதம், அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

” இனவாதம் மற்றும் அடிப்படைவாதம்மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.”” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க President Anura Kumara Dissanayake தெரிவித்தார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது. சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். “இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எல்லா வளங்கள் இருந்தாலும் மனித […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை: அரச்சுனா எம்.பி.!

  • February 4, 2026
  • 0 Comments

“இலங்கை என்பது ஒரு நாடு. தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த முறைமையை இல்லாதொழித்துவிட வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும். எனவே, அத்தேர்தலை நடத்துவார்களா என்பது தெரியாது. நடத்தப்பட்டால்கூட வடக்கில் […]

இலங்கை செய்தி

பிரபாகரனின் வீட்டை புனரமைக்க ஏற்பாடா?

  • February 4, 2026
  • 0 Comments

” பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஆராயுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், “புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீட்டை புனரமைத்து அதனை அவரின் சகோதரியிடம் கையளிப்பதற்கு வல்வெட்டித்துறை பிரதேச சபையில் யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுளது.” என சுட்டிக்காட்டி இருந்தார். […]

ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்!

  • February 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் ( Pedro Sanchez) அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவும் தவறான தகவல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள […]

error: Content is protected !!