ஆஸ்திரேலியா

அச்சுறுத்தும் சுறா: சிட்னியில் 20 கடற்கரைகளுக்கு பூட்டு!

  • January 19, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னியில் வடக்கு கடற்பகுதியில் 20 கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்துக்குள் மூவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மேற்படி 20 கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிட்னி வடக்கு கடற்கரை பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 20 வயது இளைஞர் ஒருவர் அலை சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அவ்வேளையிலேயே அவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு […]

இந்தியா செய்தி

காஷ்மீர் மற்றும் லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • January 19, 2026
  • 0 Comments

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஸ்ரீநகர், லே மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், சுமார் 200 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. காஷ்மீர் மற்றும் லடாக் தவிர, டெல்லி உள்ளிட்ட […]

இலங்கை செய்தி

“இலங்கையில் 40 லட்சம் போதை மாத்திரைகள் மீட்பு”

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதற்கமைய 2025 இல் இலங்கை முழவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கைகளின்போது ஆயிரத்து 821 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், 17 ஆயிரத்து 189 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F.U. வுட்லர் wootler தெரிவித்தார். 3 ஆயிரத்து 865 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார் 40 […]

ஐரோப்பா செய்தி

டொனால்ட் ட்ரம்பிற்கு டென்மார்க் பிரதமர் கடும் எச்சரிக்கை

  • January 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளை வர்த்தக வரி மூலம் மிரட்டிப் பணியவைக்க முடியாது என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தன்னாட்சி அதிகாரம் கொண்ட டென்மார்க்கின் கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் 8 நட்பு நாடுகள் மீது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீத வரியும், ஜூன் மாதம் முதல் அதனை 25 சதவீதமாகவும் உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலானது […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்பெயின் ரயில் விபத்து – அதிகரிக்கும் மரணங்கள்!

  • January 19, 2026
  • 0 Comments

ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   39 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலையில் 21 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 170 பேர் காயமடைந்துள்ளதுடன், 75 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  ஐந்து குழந்தைகள் உட்பட 48 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து & பகுப்பாய்வு

ட்ரம்பின் அழுத்த அரசியல்- ஐரோப்பா ஒன்றுபட்டு எதிர்க்குமா, அல்லது சமரசம் செய்யுமா?

  • January 19, 2026
  • 0 Comments

ட்ரம்பின் வரி மிரட்டல்- நட்பிலிருந்து நெருக்கடிக்குத் தள்ளப்படும் அமெரிக்கா–ஐரோப்பா உறவு வர்த்தகப் போர் அரசியல் மோதலாக மாறும் அபாயம்- புதிய திருப்பத்தில் உலக அரசியல் சர்வதேச அரசியலில், கூட்டுறவும் மோதலும் ஒரே நேரத்தில் இயங்கும் காலகட்டத்தில் உலகம் தற்போது பயணித்து வருகிறது. அந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய சமூக ஊடக அறிவிப்பு, அமெரிக்கா–ஐரோப்பா உறவுகளில் புதிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக நட்புறவாக இருந்த இந்த இரு சக்திகளுக்கிடையிலான வர்த்தக சமநிலையும், […]

இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தீர்மானம் ஒன்றும்  எட்டப்படாத நிலையில் வழக்கு விசாரணை மதியம் 2.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பெளத்த மதச்சங்கங்களின்  பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் இன்றையதினம் குறித்த வழக்கிற்கு முன்னிலையாகியிருந்ததை  அவதானிக்கக் […]

அரசியல் இலங்கை செய்தி

அநுர பிறந்த மண்ணிலேயே அரசியல் பலத்தை காட்டிவிட்டோம்: மார்தட்டுகிறது மொட்டு கட்சி!

  • January 19, 2026
  • 0 Comments

“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி எமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது கூட்டத்தை ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே (தம்புத்தேகம) நடத்தி காட்டினோம். இக்கூட்டத்தை நடத்துவதற்கு பல தடைகள் […]

உலகம்

பாகிஸ்தான் வணிக வளாக தீவிபத்து – பலி எண்ணிக்கை உயர்வு!

  • January 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் கராச்சியில் வணிக வளாகம் பற்றி எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 60 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 1,200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தில் காற்றோட்டம் இல்லாததால் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். தொடர்புடைய செய்தி  12 மணிநேர போராட்டம் : 06 பேர் மரணம் – பாகிஸ்தானில் பற்றி எரியும் வணிக வளாகம்!  

விளையாட்டு

T-20 உலகக்கிண்ணம்: ஸ்டீவ் ஸ்மித்துக்கு கதவடைப்பு?

  • January 19, 2026
  • 0 Comments

T-20 உலக்கிண்ண தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு Steve Smith இடமளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T- 20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா 3 T – 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றது. அத்தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதுவே உத்தேச உலகக்கிண்ண அணியாகவும் கருதப்படுகின்றது. இந்நிலையில் 15 பேரடங்கிய அணி […]

error: Content is protected !!