வங்காளதேசத்தில்(Bangladesh) 2024ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் தலைமையிலான எழுச்சியின் தலைவரான ஷெரிப் ஒஸ்மான் பின் ஹாடி(Sharif Osman bin Hadi), ஒரு கொலை முயற்சியில் காயமடைந்து சிங்கப்பூரில்(Singapore) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் ஹாடி உயிரிழந்துவிட்டார்” என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்காளதேச நாளிதழான டாக்கா ட்ரிப்யூனின்(Dhaka Tribune) அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் தேசியத் தேர்தலில் வேட்பாளராகக் கருதப்பட்ட ஹாடி, […]
காசாவில்(Gaza) போர்க்குற்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல்(Israe) விடுத்த சவாலை நிராகரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC) மேலும் இரண்டு நீதிபதிகள் மீது அமெரிக்கா(America) தடைகளை விதித்துள்ளது. ஜார்ஜியாவின்(Georgia) கோச்சா லார்ட்கிபனிட்ஜ்(Kocha Lartkibanidze) மற்றும் மங்கோலியாவின்(Mongolia) எர்டெனெபல்சுரேன் டாம்டின்(Erdenebalsuren Tamtin) மீது இவ்வாறு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இறையாண்மையை மீறும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நபர்களை அதிகார வரம்பிற்கு தவறாக உட்படுத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார துஷ்பிரயோகங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று வெளியுறவுத்துறை […]
நாட்டில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைக்கு மத்தியில், வங்கதேசத்தின்(Bangladesh) ராஜ்ஷாஹி(Rajshahi) மற்றும் குல்னாவில்(Khulna) உள்ள மேலும் இரண்டு விசா விண்ணப்ப மையங்களை இந்தியா மூடியுள்ளது. “ஜூலை ஓய்க்யா”(July Oikya) என்ற பதாகையின் கீழ், தீவிர இஸ்லாமியவாதிகள் குழு ஒன்று, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) நாடு திரும்பச் செய்வது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய உயர் ஸ்தானிகராலயம் அருகே ஒரு போராட்ட பேரணியை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை […]
உத்தரபிரதேசத்தில்(Uttar Pradesh) ஒரு நபர் மனைவி புர்கா(burqa) அணிய மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொன்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஃபாரூக்(Farooq) தனது 35 வயது மனைவி தாஹிரா(Tahira), 14 வயது ஷரீன்(Shareen ) மற்றும் 6 வயது அஃப்ரீன்(Afreen) ஆகியோரை இவ்வாறு கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அவர்கள் காணாமல் போனதாக வழங்கிய புகாரை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின் அடிப்படையில் கணவர் ஃபரூக்கை காவல்துறையினர் கைது செய்தனர். […]
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களிடம் அவசரமாக பல பில்லியன் யூரோ கடனை வழங்குமாறு கோரியுள்ளார். இந்த கடன், ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் பணத்திலிருந்து வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் அவசர உச்சிமாநாட்டிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைனுக்கு தற்போது கடுமையான நிதி சிக்கல் காணப்படுகிறது. வரும் வசந்த காலத்துக்குள் நிதி உதவி கிடைக்கவில்லை என்றால், ட்ரோன் உற்பத்தி உள்ளிட்ட இராணுவ […]
உத்தரப்பிரதேசத்தின்(Uttar Pradesh) லம்புவா(Lambua) பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஒரு லாரி தேநீர் கடைக்குள் மோதியதில் லாரி ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். தியாராவிலிருந்து(Diyara) லம்புவா(Lambua) நோக்கி வேகமாகச் சென்ற லாரி மூடுபனி காரணமாக ஒரு ஓலை தேநீர் கடையில் மோதி பின்னர் ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேநீர் கடை உரிமையாளரின் 28 வயது மகன் ரோஹித்(Rohit) மற்றும் 32 வயது லாரி […]
கொட்டாஞ்சேனை 6 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையொன்றிற்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த நபரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்(Pakistan) பல்வேறு நாடுகளிலிருந்து பிச்சை எடுத்ததற்காக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பின்(FIA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் அகா ரஃபியுல்லா(Agha Rafiullah) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்டுள்ளது. இந்த ஆண்டு பிச்சை எடுத்ததற்காக மொத்தம் 51,000 பாகிஸ்தானியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜா ரிஃபத் முக்தார்(Raja Rifaat Mukhtar) தெரிவித்துள்ளார். இதில் சவுதி அரேபியா(Saudi Arabia) […]
ரஷ்யாவின் நிழல் கடற்படையின் 41 கப்பல்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது. இதன் மூலம் தடை விதிக்கப்பட்ட கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. கப்பல்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான பரந்த அளவிலான சேவைகளை இனி பெற முடியாது என்றும் ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 19 தடைகளை விதித்துள்ளது. ஆனால் மொஸ்கோ தடைகளுக்கு ஏற்ப தனது […]