ஆசியா

இந்தோனேஷியாவில் நச்சுணவால் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு

  • September 25, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இந்த வாரம் பள்ளி மதிய உணவுகளிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்ச்சியான சம்பவங்களில் சமீபத்தியதும் மற்றும் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் பல பில்லியன் டாலர் இலவச உணவுத் திட்டத்திற்கு மற்றொரு பின்னடைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் நான்கு பகுதிகளில் பெருமளவிலான விஷம் பதிவாகியுள்ளது என்று அதன் ஆளுநர் டெடி முல்யாடி வியாழக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். சுகாதாரக் காரணங்களுக்காக இலவச […]

பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா ராய் வழியில் சென்ற நாகர்ஜுனா : உயர் நீதிமன்றம் கொடுத்த உறுதி

  • September 25, 2025
  • 0 Comments

நடிகர் நாகர்ஜுனா தனது தனியுரிமை பாதுகாக்க கோரி தொடர்ந்த வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலியான இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் உரிய அனுமதி இல்லாமல் புகைப்படம் வீடியோ பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் புகைப்படம் ,பெயர், வீடியோ உள்ளிட்டவற்றை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

ஆசியா

தட்சிணாமூர்த்தி கட்டையாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிங்கப்பூர் அரசாங்கம்!

  • September 25, 2025
  • 0 Comments

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில்  தடுத்துவைக்கப்பட்டிருந்த தட்சிணாமூர்த்தி கட்டையாவிற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் இவராவார். 39 வயதான அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவர் 2022 இல் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் மாதம் நீதிமன்ற காரணங்களால் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மற்றுமொரு புயல் எச்சரிக்கை – விமான சேவைகள் இரத்து!

  • September 25, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸை ரகாசா புயல் தாக்கியதை தொடர்ந்து மற்றுமொரு புயல் தாக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அரசாங்கம் பள்ளிகளை மூடியுள்ளதுடன், விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை, புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிகோல் துறைமுகங்களில் சுமார் 1,500 பேர் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது, இது பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மில்லியன் கணக்கான […]

பொழுதுபோக்கு

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து : தீர்ப்புக்கு திகதி குறிப்பு

  • September 25, 2025
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாா். 12 ஆண்டு திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கிடையே இருந்த பிரச்னை காரணமாக அண்மைக் காலமாக இருவரும் […]

பொழுதுபோக்கு

கமலின் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசரை “மேடம்” என்ற கமல்

  • September 25, 2025
  • 0 Comments

தேசிய விருது வென்ற சிறுமி த்ரிஷா தோசர்-க்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சாதனையை வென்ற நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. டியர் மிஸ். த்ரீஷா தோசர், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னுடைய சாதனையை முறியடித்துள்ளீர்கள். என்னுடைய முதல் விருதை நான் ஆறு வயதில் பெற்றிருந்தேன். நீங்கள் இன்னும் நீண்ட காலம் பயணிக்க வேண்டும் மேடம். உங்களது திறமையினை மேலும் வளர்த்துக்கொள்ளுங்கள். […]

இலங்கை

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கடற்படையை மேம்படுத்தப்பட்டுள்ளதா? – நாமல் கேள்வி!

  • September 25, 2025
  • 0 Comments

இலங்கையில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், இதில் முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் கடல்களில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் கடற்படையை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான ராஜபக்சே கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25.09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை கடற்படையின் தொழில்நுட்பம் காலாவதியானது என்றும், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் […]

தென் அமெரிக்கா

 வெனிசுலாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுகம் பதிவு!

  • September 25, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுகம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 7.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் அருகில் அமைந்திருந்த பிற மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. இந்நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி  சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. […]

வட அமெரிக்கா

பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ள அதிபர் டிரம்ப்

  • September 25, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாகிஸ்தானியப் பிரதமர் ‌ஷெபாஸ் ‌ஷெரிப்பை வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப் பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் நடைபெற வாய்ப்புள்ளதாக என்று டிரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். இரு நாடுகளும் வர்த்தக உடன்பாட்டுக்கு இணங்கிய பிறகு இச்சந்திப்பு இடம்பெறுகிறது. அண்மைய காலங்களில் அமெரிக்க-பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் திகதி அமெரிக்காவும் பாகிஸ்தானும் வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டதாக அறிவித்தன. அதன்படி அமெரிக்கா, பாகிஸ்தானியப் […]

இந்தியா

இந்தியா : லடாகில் வெடித்த மக்கள் போராட்டம் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

  • September 25, 2025
  • 0 Comments

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் போரட்டம் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில் போராட்டக்கார்கள் பா.ஜ.கவின் அலுவலகத்திற்கு தீவைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளியிப்படுத்தியுள்ளனர். இதன்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் நாற்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் தற்போது அங்கு ஊரடங்கு […]

error: Content is protected !!