விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து மரபணு கூறுகள்; வெளியான அறிக்கை
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் பலரைப் பலிவாங்கிய விபத்தில் சிக்கிய ஜேஜு ஏர் விமானத்தின் இரண்டு ‘எஞ்சின்’ இயந்திரங்களிலும் வாத்தின் மரபணுக் கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அத்தகவல் இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான விமான விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ள அவ்விபத்துக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறியும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு தென்கொரிய அதிகாரிகள் அந்த […]













