ஆசியா

முதன் முறையாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாலைத்தீவு|!

  • August 28, 2024
  • 0 Comments

மாலைத்தீவு வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் டொலர் கையிருப்பு குறைந்துள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில் இருக்கும் டொலர் கையிருப்பு ஒரு மாத இறக்குமதிக்கு போதுமானதாக இல்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவு பொருளாதாரம் முதன்மையாக சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் உலகின் மிக எளிமையான வரிக் குறியீட்டைக் கொண்ட நாடாகக் கருதப்பட்ட மாலத்தீவில் வரிவிதிப்பு, தற்போது மாலத்தீவு உள்நாட்டு வருவாய் வரி ஆணையத்தின் கீழ் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் உயிரிழந்த சுற்றுலா பயணி : உயிர் காப்பாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 28, 2024
  • 0 Comments

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஸ்பெயின் கடற்கரையில் “சிவப்புக் கொடியை உயர்த்தியபோது  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள குல்லேராவில் உள்ள ரேகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் 77 வயதான பிரித்தானிய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து செயற்பட்டுள்ளனர். அவருக்கு உடனடியாக சிபிஆர் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விடுமுறைக்கு வருபவர்களை […]

வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

  • August 28, 2024
  • 0 Comments

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த விவாத நிகழ்வை ஏபிசி நியூஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பைடன் ஜனநாயக […]

இலங்கை

இலங்கையில் இஞ்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு

  • August 28, 2024
  • 0 Comments

இலங்கையில் இஞ்சியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைக் காலமாகப் பெய்த பலத்த மழைக் காரணமாகப் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

செய்தி

இத்தாலியில் உச்சக்கட்ட வறட்சி – குடிநீரின்றி 2 மாதங்களாக தவிக்கும் மக்கள்

  • August 28, 2024
  • 0 Comments

இத்தாலியின் சிசிலி தீவில் வசிப்பவர்கள் குடிநீரின்றி 2 மாதங்களாக அவதியுறுகின்றனர். அங்கு ஏற்பட்ட வறட்சியால், அதன் கால்டானிசெட்டா (Caltanissetta) நகரத்தில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத தனியார் விற்பனையாளர்கள் லாரிகளில் தண்ணீர் விற்கின்றனர். அவர்களிடம் இருந்து மக்கள் அதிக விலை கொடுத்துக் குடிநீர் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. 4 ஆண்டுகளில் காணாத அளவுக்குக் குறைவாக மழை பெய்ததால், மே மாதம் இத்தாலிய அரசாங்கம் நாட்டில் அவசர நிலையை அறிவித்தது. அதன் வழி வளங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி இலையுதிர் பருவமழைக்காலம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய ரயில்

  • August 28, 2024
  • 0 Comments

மெல்போர்னில் இருந்து கிரேகிபர்ன் செல்லும் ரயில்கள் எசெண்டன் மற்றும் பிராட்மீடோஸ் இடையே திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிரதான புகையிரத பாதையின் சேவைகள் நேற்று பிற்பகல் இடைநிறுத்தப்பட்டமையினால் மெல்பேர்ணில் பல பயணிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது போக்குவரத்து விக்டோரியா (PTV) அதிகாரிகள், எசென்டன் மற்றும் பிராட்மீடோஸ் நிலையங்களுக்கு இடையில் கிரேகிபர்ன் பாதையில் அவசரகால சேவைகள் தேவைப்படும் ஒரு சம்பவம் காரணமாக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் பிற்பகல் 3 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது மற்றும் சிரமத்திற்கு […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

அகோரமாக மாறிய ஷிவானி.. ரசிகர்கள் ஷாக்… வைரலாகும் படங்கள்

  • August 28, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் ஷிவானி. ஸ்கூல் படிக்கும்போதே குண்டான தோற்றத்துடன் அந்த தொடரில் நடிக்கத் தொடங்கிய ஷிவானிக்கு ஆரம்பத்தில் குணச்சித்திர வேடம் தான் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் தீவிர உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறிய ஷிவானி, ஹீரோயினாக புரமோட் ஆனார். அந்த சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி. அந்த சமயத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார் ஷிவானி. […]

இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

  • August 28, 2024
  • 0 Comments

இலங்கையில் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் குழந்தைகளிடையே தோல் நோய் பிரச்சினைகள் மிகவும் பொதுவான […]

வாழ்வியல்

மலச்சிக்கல் பிரச்சினைக்கான காரணம் மற்றும் தீர்வு.!

  • August 28, 2024
  • 0 Comments

மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சமூக நோயாகவே மாறி வருகிறது. இது எதனால் வருகிறது? எப்படி சரி செய்வது? என்ற கேள்விகள் எழலாம். தலைவலி, காய்ச்சல் போல் மலச்சிக்கல் பிரச்சினையை யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்புவது இல்லை. மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தயக்கம். மலம் கழிக்க முடியவில்லை என்று ஒரு மருத்துவ சிகிச்சையா? சீ அதுவே சரியாகி விடும் என்ற எண்ணம். இது முற்றிலும் தவறானது. மலச்சிக்கல் பிரச்சினையை சாதாராணமாக கடந்து செல்வது […]

ஐரோப்பா

ரஷ்யாவை கைப்பற்ற இறுதி திட்டத்தைத் தயாரித்த உக்ரைன்

  • August 28, 2024
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான வெற்றித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அதற்கான திட்டம் அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் கிர்குக் பகுதியை தனது படைகள் ஆக்கிரமித்ததாக அவர் கூறியுள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான தனது திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடம் முன்வைக்கவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தனது […]

error: Content is protected !!