கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பு
கனடாவின் பிராம்ப்டனில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவதற்கு ஆகஸ்ட் 14 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படுவதற்கு முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நேற்று கனேடிய உயர் ஸ்தானிகரை சந்தித்துள்ளார். சந்திப்பின் போது, அமைச்சர் சப்ரி, நினைவுச்சின்னம் தொடர்பில் இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை வெளிப்படுத்தினார். கனேடிய அதிகாரிகளுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட கவலைகளை மீண்டும் வலியுறுத்தினார். கனடாவிற்குள் அரசியல் ஆதாயத்துக்காக தொடர்ந்து நடத்தப்படும் இனப்படுகொலையின் “தவறான கதை” […]













