ஆப்பிரிக்கா செய்தி

தென்னாப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 70 மில்லியன் பேர் வறட்சியால் பாதிப்பு

  • August 17, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் சுமார் 68 மில்லியன் மக்கள் எல் நினோ-தூண்டப்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய வறட்சி, பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதித்து, உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி, பரந்த பொருளாதாரங்களை சேதப்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் 16 நாடுகளைக் கொண்ட தென்னாப்பிரிக்க மேம்பாட்டு சமூகத்தின் (SADC) நாட்டுத் தலைவர்கள் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். சுமார் 68 மில்லியன் மக்கள் அல்லது பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 17% பேருக்கு […]

விளையாட்டு

ஓய்வு குறித்து 7 வருடங்களுக்கு முன்பே தெரிவித்த அஸ்வின்

  • August 17, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் செப்டம்பர் மாதம் 17ம் தேதி வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இதனால் அஸ்வின் தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தை நெருங்கி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2வது இடத்தில் […]

பொழுதுபோக்கு

தளபதியின் கோட பட ட்ரைலரில் இந்த முக்கியமான விடயங்களை கவனிச்சீங்களா?

  • August 17, 2024
  • 0 Comments

தளபதி விஜய் தன்னுடைய 68-ஆவது படமாக, ‘கோட்’ படத்தில் நடித்துள்ளார். விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின், ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், இந்த ட்ரைலரில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. ‘கோட்’ படத்தின், ட்ரெய்லரில் ஆரம்பத்திலேயே தேசியக் கொடியுடன் கூடிய கார்கள் அணிவகுப்பை காண முடிகிறது. இதன் மூலம் நாட்டின் மீது உள்ள நாட்டு பற்றை ட்ரைலரில் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் தளபதி விஜய். இதன் […]

முக்கிய செய்திகள்

மீண்டும் போலியோ; 25 ஆண்டுகளின் பின்னர் காசாவில் அடையாளம்

குழந்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத 10 மாத குழந்தைக்கே இவ்வாறு போலியோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போலியோ வைரஸ், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகின்றது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்தால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோய் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது.

இலங்கை செய்தி

அவுஸ்திரேலியாவில் இலங்கை இராஜதந்திரிக்கு பெருந்தொகை அபராதம் – வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

  • August 17, 2024
  • 0 Comments

500,000 டொலர்களுக்கு மேல் செலுத்துமாறு கான்பராவிலுள்ள இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி சுபாஷினி அருணதிலகதாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இராஜதந்திரிகள் வீட்டுப் பணிப்பெண்களை தமது உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவப் பணிகளுக்காக அழைத்துச் செல்வதற்கான வசதிகளை வெளிவிவகார அமைச்சு வழங்குவது வழமையான நடைமுறை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் 9 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட சீக்கிய பெண் மீட்பு

  • August 17, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒன்பது மாதங்களாக இரண்டு கடத்தல்காரர்களால் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான 40 வயதான பாகிஸ்தான் சீக்கியப் பெண் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். லாகூரில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சீக்கியப் பெண் மற்றும் அவரது மைனர் மகன் இருவரையும் காப்பாற்றியதாகவும், கடத்தல்/கற்பழிப்பதாகக் கூறப்படும் குற்றவாளிகளைக் கைது செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. பாலின அடிப்படையிலான வன்முறைப் பிரிவுத் தலைவர் ASP ஜைனப் காலித், நன்கானா […]

வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ்க்கு எதிரான விவாதத்தை வலுப்படுத்த இந்திய பெண்ணின் உதவியை நாடியுள்ள ட்ரம்ப்

  • August 17, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவரே அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார். இதையடுத்து, தற்போது ஜனநாயக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் […]

பொழுதுபோக்கு

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி பி.சுசீலா

  • August 17, 2024
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவரின் உடல்நிலை குறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்… பி.சுசிலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதே நேரம் என்ன பிரச்சனைக்காக பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பி.சுசீலா ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர். […]

ஆசியா

பாகிஸ்தானில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் மின்கம்பத்தில் தொங்கிய ஐந்து உடல்கள்!

  • August 17, 2024
  • 0 Comments

தென்மேற்கு பாகிஸ்தானில் மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குண்டுகள் துளைக்கப்பட்ட ஐவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் ஆகஸ்ட் 16 அன்று தெரிவித்தனர். இஸ்லாமியவாத, பிரிவினைவாத போராளிக் குழுக்கள் நீண்டநாட்களாகத் தாக்குதல் போராட்டங்களை பலுசிஸ்தானில் நடத்தி வருகின்றன. அந்த மாகாணத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லைப் பகுதியில் உள்ள டால்பாண்டின் நகரிலுள்ள ஒரு கல்லூரிக்கு அருகில் அந்த உடல்கள் கண்டறியப்பட்டன. “குண்டு துளைக்கப்பட்ட ஐந்து உடல்கள் மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டன,” என்று அப்பகுதியைச் சேர்ந்த மூத்த […]

இந்தியா

நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு: கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம்

  • August 17, 2024
  • 0 Comments

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆக.17) காலை முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொடூரச் சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முற்றிலும் முடங்கியுள்ளது. பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான […]

error: Content is protected !!