சிறப்புப் பொருளியல் மண்டலம்: விரைவில் சிங்கப்பூர்-மலேசியா இடையே உடன்பாடு
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூருடன் கலந்துபேசி இறுதி செய்யப்படும் என்று மலேசியா கூறியுள்ளது. முழு அளவிலான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவது தொடர்பாகவும் சிங்கப்பூருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் மலேசியப் பொருளாதார அமைச்சர் முகமது ரஃபிஸி ரம்லி புதன்கிழமை (ஜூலை 10) தெரிவித்தார். சிங்கப்பூருக்கு சற்று வடக்கே அமைந்துள்ள மலேசியாவின் தென்மாநிலமான ஜோகூரில் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை ஏற்படுத்த இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.அதற்கான […]













