உலகம்

நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் மாயம்!

மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 2 பயணிகள் பேருந்து, நிலைகுலைந்து திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பேருந்தில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காணாமல் போயுள்ளனர். பேருந்தில் பயணித்த மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக நேபாளத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால், நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் […]

பொழுதுபோக்கு

ரசிகர்களுடன் இந்தியன் 2 படம் பார்த்த கமல்… ரசிகர்கள் குஷி

  • July 12, 2024
  • 0 Comments

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் படத்தினை இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசன், நாசர் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளனர். படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, […]

ஆசியா

சுற்றுலா மோசடி: மலேசியாவில் மூன்று பெண்கள் உட்பட 15 இந்தியர்கள் கைது!

  • July 12, 2024
  • 0 Comments

மலேசியாவில் சுற்றுலா மோசடி தொடர்பில் இந்தியர்கள் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஆணையர் ராம்லி முகம்மது யூசுஃப் தெரிவித்துள்ளார். தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ஓர் அலுவலகத்தில் ஜூலை 1ஆம் திகதி வணிகக் குற்றவியல் காவல்துறைப் பிரிவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஆண்கள், மூவர் பெண்கள். “அந்த அலுவலகத்திலிருந்து 17 கைப்பேசிகள், சுற்றுலாத் தொகுப்பு குறித்த நான்கு துண்டுப் பிரசுரங்கள், 15 பெயரட்டைகள், ஒரு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கைப்பற்றினோம்,” […]

பொழுதுபோக்கு

மகளால் அவமானப்படும் பிரம்மாண்ட இயக்குனர் – இவருக்கே இப்படி ஒரு நிலையா?

  • July 12, 2024
  • 0 Comments

நம்பர் ஒன் இயக்குனராக கொடிக்கட்டி பறக்கும் அந்த பிரபலம் தற்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போய் இருக்கிறாராம். சினிமாவை தாண்டி குடும்பத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பவர் தான் அந்த இயக்குனர். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அழகு பார்த்த அவருக்கு தன் மகள்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசை. அதேபோல் மூத்த மகளுக்கு நல்லபடியாக திருமணமும் செய்து வைத்தார். ஆனால் அது சில மாதங்கள் கூட […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வாங்க தானியங்கி இயந்திரங்கள்…

  • July 12, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் துப்பாக்கித் தோட்டாக்களை வாங்க தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அத்தகைய இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது. துப்பாக்கித் தோட்டாக்களைப் பாதுகாப்பான முறையில் வாங்க இதுவே ஆகச் சிறந்த முறை என்பது அந்நிறுவனத்தின் வாதம். அமெரிக்கன் ரவுண்ட்ஸ் என்ற அந்நிறுவனம், அத்தகைய ஆறு இயந்திரங்களை டெக்சஸ், அலபாமா, ஓக்லஹாமா ஆகிய மாநிலங்களில் இருக்கும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளில் செயல்படுத்தியுள்ளது. இம்மாத இறுதிக்குள் டெக்சஸ், கொலராடோ மாநிலங்களில் மேலும் […]

பொழுதுபோக்கு

ருத்ர தாண்டவம் ஆடும் ‘கல்கி’… 1000 கோடியைத் தாண்டியது வசூல் வேட்டை

  • July 12, 2024
  • 0 Comments

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய ‘கல்கி 2898 ஏடி’ […]

ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிரடியாக அமுலாகும் தடை

  • July 12, 2024
  • 0 Comments

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்லோப் பெருநகரம் முழுவதும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Slough, Berkshire பகுதியில் பொது இடங்களில் மது அருந்துதல் மற்றும் மதுவைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் திறந்த கொள்கலன்களை வைத்திருப்பது போன்றவற்றின் மீது பெருநகரம் முழுவதும் தடையை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடப் பாதுகாப்பு ஆணை சமூகத்தில் சமூக விரோத நடத்தையின் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பில் நடந்த கருத்து கணிப்பில் […]

இலங்கை செய்தி

கொழும்பிற்கு பிழையான தகவல் செல்கிறது – வைத்தியர் அர்ச்சுனா கவலை

  • July 12, 2024
  • 0 Comments

கொழும்பிலுள்ள மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு பிழையாக சொல்லப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் திரிபுப் படுத்தப்பட்டு சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களான வைத்தியர் சமன் பத்திரணவாக இருக்கட்டும், வைத்தியர் கேதீஸ்வரனாக இருக்கட்டும் வடக்கில் தற்போது நடைபெறும் விடயங்களை பிழையாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எனது பக்கம் உள்ள பிரச்சினை கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு தெரியாது. முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு தெளிவான விளக்கம் இல்லை. நான் இது தொடர்பாக […]

இலங்கை

கொழும்பு நோக்கி வந்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

  • July 12, 2024
  • 0 Comments

டுபாயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வெளிநாட்டு விமானத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கராச்சி விமான நிலையத்தில் விமானம் திடீரென நேற்று தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் 57 வயதான பலவினி பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடல்நிலை மோசமானதால், மருத்துவ உதவி பெறுவதற்காக, கராச்சியில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் அனுமதியுடன் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண் பயணியை பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் விமானத்தில் ஏறிய பரிசோதித்துள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் செல்பி எடுக்க அனைவருக்கு இலவச கையடக்க தொலைபேசிகள்

  • July 12, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்ற பின் செல்பி எடுக்க, அதில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இலவச கையடக்க தொலைபேசி வழங்க சாம்சங் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக அந்நிறுவனம் தயாரித்துள்ள Galaxy Z Flip6 கையடக்க தொலைபேசி இவ்வாறு வழங்கப்படுவதால், வரலாற்றில் முதல்முறையாக இது போன்ற தனித்துவமான அனுபவத்தை போட்டியாளர்களுக்கு வழங்குவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வெற்றிபெறும் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் வெற்றியாளர்கள் தங்களின் […]

error: Content is protected !!