ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்படும் பிரதான பாதை : சாரதிகளின் கவனத்திற்கு!

  • June 24, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கார்ன்வாலில் A30 இல் £330 மில்லியன் மதிப்பிலான இரட்டைப் பாதை திறக்கப்பட்டது. சாலை போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டதை தேசிய நெடுஞ்சாலைகள் உறுதிப்படுத்தியுள்ளன. கோடைகால சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்திற்கு முன்பாக இரட்டைப் பாதையை திறக்க சாலை அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில்,  பாதை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமதங்கள், போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக குறையும் என நம்பப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த பாதை திறக்கப்பட்டாலும், மேலும் சில பாதைகள் மூடப்பவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அறிவித்துள்ளது. ஜூன் 24 முதல் ஜூலை 12 வரை […]

இலங்கை

கிளிநொச்சியில் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்ட கருச்சிதைவுகள்

  • June 24, 2024
  • 0 Comments

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று இரவு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையின் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதவியில் மாற்றம்!

  • June 24, 2024
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாளேந்திரன் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சில நிமிடங்களுக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆசியா

தென்கொரிய மின்கலன் ஆலையில் தீ: ஒருவர் பலி, 21பேரை காணவில்லை

  • June 24, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் உள்ள மின்கலன் ஆலை ஒன்றில் பெரிய அளவில் தீ மூண்டதைத் தொடர்ந்து ஒருவர் இறந்ததஉ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று (ஜூன் 24) நிகழ்ந்த இச்சம்பவத்தில் 21 பேரைக் காணவில்லை. தீ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தீ மூண்ட லித்தியம் மின்கலன் ஆலை, அரிசெல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அரிசெல், தென்கொரியாவின் முக்கிய மின்கலன் உற்பத்தி நிறுவனமாகும். ஆலை, தலைநகர் சியோலுக்கு கு தெற்கே இருக்கும் ஹுவாசியோங் நகரில் அமைந்துள்ளது. ஆலைக்குள் நுழைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

  • June 24, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.82 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

செய்தி

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • June 24, 2024
  • 0 Comments

கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவை அவிநாசி சாலை சித்ராவில் சா்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும் நாள்தோறும் 35 – க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு எப்போதும் அதிக அளவிலான பயணிகள் வந்து செல்வா். கோவை சர்வதேச […]

செய்தி வாழ்வியல்

நாள் ஒன்றுக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிட வேண்டும்?

  • June 24, 2024
  • 0 Comments

கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகளை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கே காணலாம். என்னதான் நட்ஸில் நல்ல கொழுப்பு இருந்தாலும் அது உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும். நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது அதிலும் எண்ணெய் மற்றும் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் 30 கிராமை விட குறைவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாகவே நட்ஸ் வகைகள் […]

பொழுதுபோக்கு

“அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது” மனம் திறந்தார் லட்சுமி மேனன்

  • June 24, 2024
  • 0 Comments

2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியவர் தான் லட்சுமி மேனன். சுந்தர பாண்டியன் படத்திற்கு பிறகு கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்துபல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகையாக மாறினார். கடைசியாக இவர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லட்சுமி மேனன், தனது முன்னாள் காதலன் குறித்து […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் – பலர் பலி

  • June 24, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள கிறித்துவ ஜெய வழிபாட்டுத் தலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் 7 பொலிஸார் ஒரு பாதிரியார் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இருவேறு நகரங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வழிபாட்டுத் தலங்களில் இத்தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு தேவாலயத்திற்கும் தீவிரவாதிகள் தீ வைத்தனர். பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி

அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலைகளால் பாதிப்பு

  • June 24, 2024
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலைகளால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வர்ஜீனியா முதல் நியூயார்க் வரை நீடித்து வரும் கடும் வெப்ப அலைகள் காரணமாக பால்டிமோர் மற்றும் பிலடெல்பியா மாகாணங்களில் நேற்று 38 செல்சியஸ் பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 15 பாகைக்கு மேல் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று நெப்ராஸ்கா மற்றும் கன்சாஸ் மாகாணங்களில் கடும் வெப்பம் தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றம் […]

error: Content is protected !!