இந்தியா

டெல்லியில் சிறுவர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து;7 பச்சிளம் குழந்தைகள் மரணம்

  • May 26, 2024
  • 0 Comments

டெல்லியில் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 11:32 மணியளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல் […]

உலகம்

விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக உருகும் டூம்ஸ்டே பனிப்பாறை!

  • May 26, 2024
  • 0 Comments

அண்டார்டிகாவின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ விஞ்ஞானிகள் கணித்ததை விட ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பனிப்பாறைகளில் த்வைட்ஸ் என்ற பெயர் கொண்ட  பனிப்பாறை புளோரிடாவின் அளவு மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ளது. 80 களில் இருந்து இந்த தளம் வேகமாக உருகி வருகிறது. இது உலக கடல் மட்டத்தில் 4% உயர்வுக்கு பங்களித்தது, நூற்றுக்கணக்கான பில்லியன் டன் பனிக்கட்டிகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

விஜய் டிவியில் ஒரு ஷோவிற்கு சிம்ரன் வர இருப்பதாக சூப்பரான தகவல்

  • May 26, 2024
  • 0 Comments

சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது. அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான், அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது என இந்த தொலைக்காட்சியில் மாஸாக ஓடிய நிறைய ஷோக்களை கூறலாம். இப்போதும் சூப்பர் சூப்பரான ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது, அதற்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரமும் உள்ளது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் […]

ஐரோப்பா

கடந்த 24 ஆண்டுகளில் முதல்முறையாக ஜெர்மனி செல்லும் பிரான்ஸ் அதிபர்

  • May 26, 2024
  • 0 Comments

பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன், மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு ஜெர்மனி சென்றுள்ளார். 24 ஆண்டுகளில் பிரான்ஸ் அதிபர் ஒருவர் ஜெர்மனிக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும் . உக்ரேனியப் போர் முதல் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் வரை ஐரோப்பா முக்கியச் சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், அதிபர் மெக்ரோனின் பயணம், பிரெஞ்சு-ஜெர்மானிய உறவின் வலிமைக்கான உரைகல்லாகக் கருதப்படுகிறது. அதிபர் மெக்ரோன், பிரதமர் ஷோல்ஸ் இருவரும் வெவ்வேறு விதமான தலைமைத்துவ நடைமுறையைக் […]

ஐரோப்பா

பட்டதாரி விசாவில் பிரித்தானியா வர உத்தேசிப்பவர்களுக்கு புதிய சிக்கல்!

  • May 26, 2024
  • 0 Comments

பட்டதாரி விசாவில் வருபவர்களுக்கான தேவைகளை அதிரிக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஆங்கில மொழிப் புலமை தேவைக்கான படியை உயர்த்துவதே அதன் நோக்கமாகும். இதன்படி கிராஜுவேட் ரூட்டின் கீழ் இங்கிலாந்துக்கு வரும் சர்வதேச மாணவர்கள் விரைவில் நாட்டில் தங்குவதற்கு கட்டாய மொழிப் பரீட்சைகளை எடுக்க வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கம் ‘சிறந்த மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுத்துவருவதாக VisaGuide.World இன் அறிக்கைகள் கூறுகின்றன. குடியேற்ற முறையின் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் அதே வேளையில், உலகத் […]

உலகம்

பப்புவா நியூகினியா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!

  • May 26, 2024
  • 0 Comments

வடக்கு பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவினால் 670க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளின் புதிய கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. குறித்த நிலச்சரிவானது தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 370 மைல் (600 கிமீ) தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான கிராமத்தை தாக்கியது. இதில் ஏராளமானவர்கள் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதுவரை 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்களுக்கும் கட்டாயமாகும் இராணுவ சேவை!

  • May 26, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் 18 வயது இளைஞர்கள் இராணுவ சேவை, அல்லது NHS இல் பணியாற்றும் வகையில் ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார். இது இளைஞர்கள் நாட்டுக்காக பணியாற்றுவதை குறிக்கிறது. ஆனால் இந்த சேவைகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமா என்பது தொடர்பில் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை. உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் போர் அதிகரித்து வருகின்ற நிலையில், சில […]

ஆசியா

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் அழைப்பு விடுத்த தைவானிய அதிபர்

  • May 26, 2024
  • 0 Comments

தைவானிய அதிபர் லாய் சிங்-தே,சீனாவுடன் பேச்சு நடத்த மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தைவானுக்கு அருகே இரண்டு நாள் போர்ப் பயிற்சியைச் சீனா நிறைவுசெய்த பிறகு அவர் அவ்வாறு கூறியுள்ளார்.இரு தரப்புக்குமிடையே புரிதலை மேம்படுத்தவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து மீண்டும் நட்புறவை ஏற்படுத்தவும் விரும்புவதாகத் லாய் தெரிவித்தார். தைவானைத் தனது அங்கம் என்று கூறும் சீனா, மே 23, 24ஆம் திகதிகளில் போர்ப் பயிற்சியை நடத்தியது. லாய் பிரிவினைவாதி என்று சீனா தொடர்ந்து சாடிவரும் வேளையில், தைவானைச் சொந்தம் […]

பொழுதுபோக்கு

செந்தில் – கவுண்டமணி காமெடி காட்சியில் வந்த அழகுமணி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

  • May 26, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் காமெடியை எடுத்துக்கொண்டால் செந்தில்-கவுண்டமணிக்கு முக்கிய பங்காளர்களாவர். இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்துமே அமர்க்களம் தான். நக்கல், நையாண்டி, குசும்பு, கலாட்டா, விழிப்புணர்வு என எல்லாம் கலந்த கலவையாக இவர்கள் இடம்பெறும் காட்சிகள் இருக்கும். தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் கவுண்டமணி செந்தில் இருவரும் சக்கரவர்திகளாக வலம் வந்தனர். இன்று எவ்வளவோ காமெடி நடிகர்கள் வந்தபோதிலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களாக கவுண்டமணி செந்தில் திகழ்கின்றனர். கவுண்டமணி-செந்தில் இடம்பெற்ற மகுடம் […]

ஐரோப்பா

பாரிஸில் Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கான கட்டணம் அதிகரிப்பு

  • May 26, 2024
  • 0 Comments

பாரிஸிலில் அமைந்துள்ள Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து புதிய கட்டணம் நடப்புக்கு வரும் நிலையில் Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கு தற்போது கட்டணம் 29.40 யூரோவில் இருந்து 35.30 யூரோவுக்கு உயர்த்தப்படும். பாரிஸ் நகர மன்றம் நுழைவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தது. கோபுரத்தில் மேற்கொள்ளப்படும் அவசரச் சீரமைப்புப் பணிகளுக்கான செலவைச் சமாளிக்க கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை உதவும் என […]

error: Content is protected !!