உலகம்

நியூயார்க்கில் காசா மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள்!

  • April 30, 2024
  • 0 Comments

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் காசாவில் போர் நிறுத்தம் கோரி  அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கூடாரங்களில் தங்கியிருந்த மாணவர்களை   வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குறித்த உத்தரவை மீறி அங்க தங்கியிருந்த மாணவர்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்தே போராட்டம் வலுப்பெற்றுள்ளது. டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் செவ்வாய்க் கிழமை அதிகாலை பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்து, நுழைவாயில்களைத் தடுத்து, ஜன்னலுக்கு வெளியே பாலஸ்தீனக் கொடியை […]

இலங்கை

பிரித்தானியாவில் தொழில்களை இழக்கும் அபாயத்தில் உள்ள 1500 பேர்!

  • April 30, 2024
  • 0 Comments

Premier Inn உரிமையாளர் Whitbread மேலும் ஹோட்டல் அறைகளை கட்டும் திட்டங்களின் ஒரு பகுதியாக அதன் உணவு சங்கிலியை 200 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சுமார் 1,500 பிரித்தானியர்கள் தொழில்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனம், ஆண்டு லாபத்தில் 36% அதிகரிப்பை £561m ஆக அறிவிக்கும் போது, விரைவுப்படுத்தும் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்தில் ஏறக்குறைய 37000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

அமெரக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் ; 3 பொலிஸார் உட்பட நால்வர் பலி

  • April 30, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பொலிஸார் பதிலடி தாக்குதல் நடத்தினர். 3 மணிநேரத்திற்கு மேல் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்தனர். 5 பொலிஸார் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் […]

பொழுதுபோக்கு

ரஜினியின் “கூலி” படத்தில் நடிக்க விருப்பமா? இதோ உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்

  • April 30, 2024
  • 0 Comments

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில் அந்தப் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷன் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினியை வைத்து எப்படிப்பட்ட படத்தை லோகேஷ் கொடுக்கப்போகிறார் என்ற ஆவல் கோலிவுட்டில் இருக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ், ‘நான் கமலின் தீவிர ரசிகராக இருந்தாலும் ரஜினியின் படங்களையும் ஓபனிங் டே ஓபனிங் ஷோ பார்ப்பேன். […]

இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • April 30, 2024
  • 0 Comments

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாலும் எரிபொருளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 31ஆம் தேதி எரிபொருள் விலையில் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரக எரிபொருள் 07 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் 447 இன் விலை 440 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் லங்கா […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் உள்ள Harry Potter Castle கட்டிடத்தை தாக்கி அழித்த ரஷ்யா

  • April 30, 2024
  • 0 Comments

உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரத்தில் உள்ள Harry Potter Castle என்ற புகழ்பெற்ற கட்டிடம் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் முப்பத்திரண்டு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு நாய் கொல்லப்பட்டது மற்றும் 28 காயமடைந்தவர்களில் குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவதாக ஒடேசா பிராந்திய ஆளுநர் ஓலே கிப்பர் உறுதிப்படுத்தினார். தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் சிர்ஹி கிவாலாவின் வீடு Harry […]

பொழுதுபோக்கு

நம்ம ஆளு படம்னா சும்மாவா? பட்டையை கிளப்பும் கில்லி ரீ-ரிலீஸ் வசூல்

  • April 30, 2024
  • 0 Comments

விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதன் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. தமிழில் தற்போது வெளியாகும் புதுப்படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக சொதப்பி வருவதால், பழைய ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்து திரையரங்குகள் கல்லாகட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி உலகமெங்கும் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதுவரை தமிழில் […]

வட அமெரிக்கா

கனடாவில் அமுலாகும் சர்வதேச மாணவர்களுக்கான பணி நேர அனுமதி மீதான கட்டுப்பாடு!

  • April 30, 2024
  • 0 Comments

கனடாவில் செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச மாணவர்கள் வாரத்திற்கு 24 மணிநேரம் வரை மாத்திரமே வளாகத்திற்கு வெளியே வேலை செய்ய முடியும் என்று குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், COVID-19 தொற்றுநோய்களின் போது சர்வதேச மாணவர்களுக்கான வேலை நேரத்தின் 20 மணிநேர வரம்பை தற்காலிகமாகத் தள்ளுபடி செய்தனர். கனடாவின் தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்கவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிதிச்சுமையைக் குறைக்கவும் சர்வதேச மாணவர்களை அனுமதிக்க […]

ஆசியா

வெப்பமான காலநிலை காரணமாக பல ஆசிய நாடுகள் ஆபத்தில்

  • April 30, 2024
  • 0 Comments

வெப்பமான காலநிலை காரணமாக, பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மின்சார அமைப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படும் என இந்நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பநிலை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற மருத்துவ நிலைமைகள் தோன்றியதால் பாடசாலைகளை மூட பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை […]

கருத்து & பகுப்பாய்வு

கொரோனா போன்ற பெரிய நோய்ப்பரவலை சமாளிக்க உலக நாடுகள் போடும் திட்டம்

  • April 30, 2024
  • 0 Comments

கொரோனா போன்ற பெரிய நோய்ப்பரவலை சமாளிக்க உலக நாடுகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. COVID 19 போன்று மீண்டும் ஒரு பெரிய நோய் வந்தால் உலகம் அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றிய பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது. பேச்சு இரண்டு வருடமாக நடக்கிறது. தொடங்கியிருப்பது ஒன்பதாவது கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தையாகும்.. உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) COVID 19 போன்ற ஒரு நோய் இன்று வந்தால் அப்போது ஏற்பட்ட […]

error: Content is protected !!