ஆஸ்திரேலியா

பிரித்தானியாவிற்கு 03 பில்லியன்களை வழங்கும் ஆஸ்திரேலியா!

  • March 22, 2024
  • 0 Comments

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிப்பதற்கும், அதன் புதிய கடற்படை சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்வதற்கும் பிரிட்டிஷ் தொழில்துறைக்கு ஆஸ்திரேலியா 4.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ($3 பில்லியன்) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. தென் சீனக் கடல் மற்றும் தென் பசிபிக் பகுதியில் சீனாவின் அதிகரித்த செயல்பாடு போன்ற சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனையடுத்தே மேற்படி செய்தி வெளியாகியுள்ளது. U.K. பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், நீர்மூழ்கிக் கப்பல் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மனித மூளைக்குள் நியூராலிங்க் சிப் – மனதில் நினைத்தை அப்படியே செய்யும் கணினி

  • March 22, 2024
  • 0 Comments

முதல் முறையாக மனித மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டு, அந்த நபர் தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடும் வீடியோவை எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்பம் மிக வேமாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்பத்தில் புது புது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில், தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாகவும், உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தும் […]

இலங்கை

இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு!

  • March 22, 2024
  • 0 Comments

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். 1000 ரூபா பரிசாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

லண்டனை உலுக்கிய சீன பெண்ணின் மோசடி – மிரள வைக்கும் சொத்து மதிப்பு

  • March 22, 2024
  • 0 Comments

லண்டனில் 2 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள பிட்காயினுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முன்னாள் டேக்அவே பெண் ஊழியர் பணமோசடியுடன் தொடர்புடைய குற்றத்திற்காக சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். வடக்கு லண்டனில் உள்ள ஹெண்டனைச் சேர்ந்த ஜியான் வென் என்ற 42 வயதான பெண் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வீடுகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட நாணயங்களை சொத்துகளாக மாற்றுவதில் ஈடுபட்டார். ஜப்பான், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் வைரம் மற்றும் பழங்காலப் பொருட்கள் வர்த்தகம் செய்வதாகக் கூறிய […]

ஐரோப்பா

அயர்லாந்தின் உயர்கல்வி அமைச்சர் சைமனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

  • March 22, 2024
  • 0 Comments

அயர்லாந்தின் மேலதிக மற்றும் உயர்கல்வி அமைச்சரான சைமன் ஹாரிஸ் நாட்டின் அடுத்த பிரதம மந்திரி ஆவதற்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சைமன் ஹாரிஸ் தனது விருப்பத்தை அறிவிக்கும் பட்சத்தில் அவர்மட்டுமே வேட்பாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினரிகளின் ஆதரவு பக்கபலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்துறை அமைச்சர் சைமன் கோவினி, நீதித்துறை அமைச்சர் ஹெலன் மெக்கென்டீ மற்றும் பொதுச் செலவினங்களுக்கான அமைச்சர் பாஸ்கல் டோனோஹோ உட்பட சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படும் மற்றவர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மனைவியை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை

  • March 22, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் மனைவியை கொலை செய்த ஒருவருக்கு தண்டனை விதித்துக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் டியுஸ்பேர்க் மாநில நீதிமன்றமானது 26 வயது நபர் ஒருவருக்கு 13 வருட கடூழிய சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 26 வயதுடைய நபரானவர் கடந்த ஆண்டு 19 வயதுடைய மனைவியை காரால் மோதி கொலை செய்ததுடன், தனது குழந்தை ஒன்றுக்கும் காயத்தை ஏற்படுத்தி இருந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொலிஸார் இந்த கொலை தொடர்பில் அதி தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை […]

ஐரோப்பா

லண்டன் மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தம்!

  • March 22, 2024
  • 0 Comments

லண்டன் மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் AUKUS அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் AUKUS ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ளும் முயற்சியில் மூன்று நீண்டகால நட்பு நாடுகளும் கூட்டாக தங்கள் இராணுவ வலிமையை அதிகரிக்க உறுதியளித்துள்ளன. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், ” மூன்று அரசாங்கங்களும் இதைச் செய்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “இது நடக்கும், […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

  • March 22, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து அகதிகள் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள சுரங்கம் ஒன்றின் அருகே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர். அகதிகளில் 14, 15 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 120 அகதிகள் இருந்ததாகவும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பரிசில் வசிக்கும் அகதிகள், வீடற்றவர்களை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் திட்டத்தை அரசு […]

இலங்கை

இலங்கை வானிலையில் திடீர் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • March 22, 2024
  • 0 Comments

கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் இன்று (22.03) சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கணவர்

  • March 22, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபருக்கு 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் குழந்தையைக் கொல்லப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். குழந்தை உறங்கிக்கொண்டிருந்ததால் தொலைபேசியில் உரக்கப் பேசவேண்டாம் என்று அந்த நபரின் மனைவி கூறியிருந்தார். கோபத்தில் அந்த 24 வயது நபர் அவ்வாறு நடந்துகொண்டார். அச்சுறுத்தல் ஏற்படுத்தி, வேண்டுமென்றே காயம் விளைவித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இன்னொரு சம்பவத்தில் தமது Singpass விவரங்களை வெளியிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 3 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும். […]

error: Content is protected !!