ஈராக்கில் திருமண நிகழ்வின் போது திடீர் தீ விபத்து – 100 பேர் வரை பலி..!
ஈராக்கில் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர்.திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். […]













