கிளிநொச்சி:மனைவியின் கர்ப்பப்பை அகற்றல்…பொலிஸில் முறைப்பாடு செய்த கணவன்
தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவி செவ்வாய்க்கிழமை (26) பிரசவத்துக்காக அன்று அனுமதிக்கப்பட்டார். தனது மனைவிக்கு புதன்கிழமை (27) சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டது. அத்துடன், எனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இவை மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து, அந்த பெண்ணின் கணவரான இராதுரை சுரேஸ் என்பவர் தர்மபுரம் […]













