செய்தி தமிழ்நாடு

சூர்ய நமஸ்காரம் போதும் உடல் உறுப்புகள் சீராகும்

சென்னை வடபழனியில் உள்ள யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் ஆகியோர் இனைந்து    ரதசப்தமியை முன்னிட்டு  நடத்திய சர்வதேச அளவிலான 108  சூரிய நமஸ்கார் யோகாசன உலக சாதனை  நிகழ்ச்சி

மற்றும் யோகாசனம் செய்வதன் நன்மைகள் குறித்த கருத்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை  இனையதள  காணொலி காட்சி  வாயிலாகவும் நேரடியாகவும் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்றது.

யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட் நிறுவனர் மற்றும் இயக்குனருமான யோக ஆச்சார்யா எழிலரசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   இனையதள காணொலி காட்சி வாயிலாகவும் நேரடியாகவும்  ஏராளமான மாணவ மாணவியர்களும் பெரியவர்களும் கலந்து கொண்டு  108 சூர்ய நமஸ்கார் யோகசனம் செய்து நேவல் உலக சாதனை படைத்தனர்

மேலும் யோகசனம் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இணையதள வாயிலாக நடைபெற்ற  கருத்துரையாடல் நிகழ்ச்சியில்   கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

S.எழிலரசி, IYAவின்  ஆயுட்கால உறுப்பினரும் YHCI வின் நிறுவனர் மற்றும் இயக்குனர், தலைவர், யோகா போட்டிகளின் துணைக்குழு, TNSC-IYA தலைமை உரையை வழங்கினார்

அனாஹட்டா யோகா அகாடமியின் நிறுவனரும், நோவா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் இந்திய இயக்குநருமான இ. தில்லிபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

டாக்டர். கௌஸ்துப் தேசிகாச்சார், ஐயாவின் ஆயுட்கால உறுப்பினர், தலைமைச் சிகிச்சை மற்றும் தலைமை சிகிச்சையாளர், கிருஷ்ணமாச்சார்யா ஹீலிங் பவுண்டேஷன், சென்னை மற்றும் துணைத் தலைவர், TNSC-IYA ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

IYA வின் ஆயுட்கால உறுப்பினரும், விவேகானந்த கேந்திரத்தின் செயல்பாடுகளுக்கான தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரும், TNSC-IYA பொருளாளருமான R. தங்கலட்சுமி கருத்துரையை வழங்கினார்.

பேராசிரியரும் IYA வின்  ஆயுட்கால உறுப்பினரும, TNSC-IYA வின் செயலாளருமான டாக்டர்.ஆர்.இளங்கோவன் நிறைவுரையை வழங்கினார். இந்த மெகா நிகழ்ச்சியில் 2,190 மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் உலக சாதனை 108 சூர்ய நமஸ்கார் நிகழ்ச்சிக்கு பொருளுதவி வழங்கிய   திரு. வி, டெக்னோபிரீனியர் மற்றும் நிறுவனர், வி  லேப்ஸ் அண்டு சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கும்   நன்றிகள் தெரிவிக்கப்டட்டது

கானொலி காட்சி வாயிலாகவும் நேரடியாகவும்  நடைபெற்ற இந்த 108 சூர்ய நமஸ்கார் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 2190 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்  இந்நிகழ்ச்சியில் ஏராளமான யோகா ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர் ஒரே நேரத்த்தில் 2190 பேர் நேரடியாகவும் இனையதள கானொலி காட்சி வாயிலாகம் 108 சூர்ய நமஸ்கார் செய்ததால் நோவல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்

மேலும் கடந்த ஆண்டு 1750 பேர் பங்கு பெற்று படைத்த சாதனையை இந்த ஆண்டு 2190 பேர் பங்கு பெற்று முறியடித்தனர். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது

தற்போது கானொலி காட்சி வாயிலாகவும் நேரடியாகவும் நடைபெற்ற இந்த 108 சூர்ய நமஸ்கார் நிகழ்ச்சியின் மூலம் மன அழுத்தம் நீங்கி உடலுக்கு புத்துனர்ச்சியையும் மன மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது,

மேலும் இதன் மூலம்  உலகின் பல்வேறு நாட்டினரோடு  இனைந்து ஒன்றாக சூர்ய நமஸ்கார் யோகாசனம் செய்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது எனவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனையதள பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட்டின் நிறுவனர் எழிலரசி கூறியதாவது, சூரிய நமஸ்காரம் செய்வதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன குறிப்பாக  சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சிமுறை.

சில காரணங்களால் உடல் பயிற்சியோ அல்லது யோகாவோ செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவர். சூர்ய நமஸ்காரத்தில் உள்ள ஆசனங்கள் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

இதயத்தை முடுக்கிவிட்டு ரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.

மேலும் உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து நரம்புகளையும் சீராக செயல்பட வைத்து உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் வலிமையும் கொடுக்கின்றது  இது போல்  ஏராளமான நம்மைக்கள் சூர்ய நமஸ்காரம் செய்வதால் நமக்கு கிடைக்கின்றன

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content