காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (06) இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றிக் கழக தரப்பில் இருந்து ஆதரவு கோரப்பட்டிருந்த நிலையிலேயே, அவசர கூட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, காங்கிரசும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.




