உலகம்

ஜெனீவாவில் மீண்டும் சந்திக்கும் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள்!

அமெரிக்காவுடனான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் சார்பான தூதுக்குழு இன்று ஜெனீவாவிற்கு புறப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff)  மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் நாளைய தினம் ஜெனீவாவில் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தலைமையிலான தூதுக்குழுவினரை சந்திக்கவுள்ளனர்.

இஸ்லாமியக் குடியரசின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவத் திறனை அதிகரித்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் சுமூகமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!