இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து தாயம் திரும்புகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung, எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், இலங்கையில் நான்கு ஆண்டுகள் சேவையாற்றினார். ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள 39 இராஜதந்திரிகள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கொழும்பிலிருந்து வாஷிங்டன் செல்கின்றார். ஜுலி சங், இலங்கை அரசியல் களத்தில் எப்போதும் பேசுபொருளாக இருந்த […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய இராணுவத் தளபதி!

  • January 7, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi, இலங்கை வந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை இராணுத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே Major General D.K.S.K. Dolage வரவேற்றார். இந்திய தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவரது விஜயம் அமைந்துள்ளது. இந்திய இராணுவத் தளபதி, இலங்கையின் மூத்த இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைச் இன்று […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் புயலாக மாறியுள்ள ஆங்கில பாடம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

  • January 6, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று (05) கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தரம் ஆறு […]

அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலா விவகாரம்: ஐ.நாவிடம் இலங்கை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. சபை, பாதுகாப்பு சபை என்பவற்றிடமே இலங்கை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் […]

அரசியல் இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு!!

  • January 6, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் இன்று (6) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறும். இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக்கொள்வதற்குரிய விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது. மேலும் சமகால அரசியல் தொடர்பிலும் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறையில் உச்சம் தொட்டது இலங்கை: அமைச்சர் பெருமிதம்!

  • January 5, 2026
  • 0 Comments

சுற்றுலாப் பயணிகளின் வருகைமூலம் கடந்த வருடம் 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று (5) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். “ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாக இலங்கைக்கு அதிகளவு அந்திய செலாவணி கிடைக்கப்பெறுகின்றது. அந்தவகையில் இலங்கை வரலாற்றில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டு பதிவானது. 23 லட்சத்து […]

அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அதிரடி!

  • January 5, 2026
  • 0 Comments

“அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். வெனிசுலாமீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இடதுசாரி சக்திகளுடன் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் எனவும் அவர் கூறினார். எனினும், திகதி விவரம் தொடர்பான தகவல்களை வாசுதேவ நாணயக்கார வெளியிடவில்லை. “ எண்ணெய் வளம்மீதான பேராசை காரணமாகவே வெனிசுலாமீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார். ட்ரம்பின் […]

இந்தியா இலங்கை செய்தி

இந்திய இராணுவத் தளபதி நாளை இலங்கை விஜயம்!

  • January 4, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi மூன்று நாட்கள் பயணமாக நாளை (05) இலங்கை வருகின்றார். இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படவுள்ளது. இந்திய இராணுவத் தளபதியுடன் மேலும் சில உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளனர். 8 ஆம் திகதிவரை அவர்கள் நாட்டில் தங்கி இருப்பார்கள். இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. […]

இலங்கை செய்தி

“ இலங்கை அரசியலில் தேசிய தலைவர் ஒருவர் உருவாகவில்லை”

  • January 2, 2026
  • 0 Comments

இலங்கையில் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் இல்லை என்று எல்லே குணவங்க தேரர் Elle Gunavanga Thero தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மெலும் கூறியவை வருமாறு, “ இலங்கைக்குரிய கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்து வந்துள்ளோம். எனவே, எமது நாட்டு கலாசாரத்தில் கைவைப்பதற்கு எவரும் முற்படக்கூடாது. எமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். எமக்கு அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் ஒருவர் […]

இலங்கை செய்தி

இலங்கை, பங்களாதேஸ் இரு தரப்பு உறவை வலுப்படுத்த திட்டம்!

  • January 2, 2026
  • 0 Comments

பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முகமது Mohammad Yunus யூனுஸை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்டா சென்றிருந்தார். இவ்விஜயத்தின்போதே மேற்படி சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக பங்களாதேஸ் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்தார். இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் […]

error: Content is protected !!