இலங்கை செய்தி

“எரிபொருள் சிக்கனம்” – ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

“எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் . அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நேற்று […]

இலங்கை செய்தி

இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

  • March 17, 2026
  • 0 Comments

“மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்றது. இதன்போது மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா, மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “போர் சூழ்நிலை எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை தற்போது கணிக்க முடியாது. உக்கிர நிலை ஏற்பட்டால்கூட […]

உலகம்

“தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் ட்ரம்ப்”

  • March 17, 2026
  • 0 Comments

எரிபொருள் நெருக்கடி உலகில் பலவகையான எதிர்த் தாக்கங்களை உருவாக்கியுள்ளதாகவும், உடனடியாக ஹார்மூஸ் நீரிணை பகுதியில் அமைதியை ஏற்படுத்துமாறும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள், கூட்டாக டொனால்ட் ட்ரம்பிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேவேளை, ஹார்மூஸ் நீரிணை ஊடாக எண்ணெய் – எரிவாயு போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

நாடாளுமன்றுக்கும் நாளை விடுமுறை!

  • March 17, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற அமர்வு நாளை (18) நடைபெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று (17) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக வாரந்தோறும் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமையவே நாளை நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே திட்டமிட்டபடி சபை அமர்வு இடம்பெறும்.

உலகம் செய்தி

கார்க் தீவை கைப்பற்ற ட்ரம்ப் வியூகம்?

  • March 17, 2026
  • 0 Comments

ஈரான் பொருளாதாரத்தின் இதயமாகக் கருதப்படுகின்ற கார்க் தீவை கைப்பற்றும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவிலேயே நடைபெறுகின்றது. இதனால் ஈரானின் வருவாயை முடக்க, இந்த தீவுக்கு ராணுவத்தை அனுப்பி கைப்பற்றும் திட்டம் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது. எனினும், இந்த தீவுக்கு அமெரிக்க ராணுவம் சென்றால், ஈரான் பதிலடியில் இறங்கும். சவுதி உட்பட வளைகுடா நாடுகளில் […]

உலகம் செய்தி

சீன விஜயத்தை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

  • March 17, 2026
  • 0 Comments

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக சீனாவிற்கான தனது அரசுமுறைப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பு இல்லாததும், அந்நாடு ஈரானிடமிருந்து தொடர்ந்து எரிசக்தி கொள்வனவு செய்வதும் அமெரிக்காவை கொதிப்படைய வைத்துள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மோதல்கள் நீடித்து வரும்நிலையில் ட்ரம்பின் இந்த நகர்வு இரு தரப்பு உறவை மேலும் விரிசலடைய வைக்கும் என தெரியவருகின்றது. மத்திய கிழக்கு போரில் ஈரானுக்கு ஆதரவாக சீனா நேரில் களமிறங்காவிட்டாலும், முறைமுக […]

விளையாட்டு

அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளை மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு ஈரான் கோரிக்கை

  • March 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளை மெக்சிக்கோவுக்கு Mexico மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் FIFA ஈரான் பேச்சு நடத்திவருகின்றது. உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி தனது லீக் ஆட்டங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய பதற்றமான போர்ச் சூழலால், ஈரான் வீரர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க அந்நாட்டின் விளையாட்டுதுறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் […]

இலங்கை செய்தி

பல்கலைக்கழகங்களில் இணையவழியில் விரிவுரை: பின்னணி என்ன?

  • March 17, 2026
  • 0 Comments

பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் (ஒன்லைன்) முறையில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்கள் தற்போது சாத்தியமான இடங்களில் புதன்கிழமைகளில் ‘வீட்டிலிருந்தே பணிபுரிதல்’ முறையைப் பின்பற்றி வருகின்றனர். அதேவேளை, அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் முழுமையாக இணையவழியில் முன்னெடுப்பது தற்போதைக்குச் சாத்தியமில்லை […]

இலங்கை செய்தி

‘மின்சாரம் விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை’

  • March 17, 2026
  • 0 Comments

மின்சாரம் விநியோகத்தில் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் Arkham Ilyas தெரிவித்துள்ளார். நாடு வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க எச்சரித்திருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், “ எரிசக்தி ஆதாரங்களைத் திறமையாக விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் மழைப் பற்றாக்குறை அல்லது நிலக்கரி ஏற்றுமதியில் தாமதம் […]

ஆஸ்திரேலியா செய்தி

அவசரகால எரிபொருள் கையிருப்பை விடுவித்தது ஆஸ்திரேலியா!

  • March 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்நாட்டு அரசு தனது இருப்பு வைப்புத் தொகையிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை சந்தையில் வெளியிடத் தொடங்கியுள்ளது. ஈரானில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் உலகளவில் விலை உயர்ந்துள்ள நிலையில், தட்டுப்பாட்டைக் குறைக்க சுமார் 762 மில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைச் சேமித்து வருவதால், பல இடங்களில் இருப்பு தீர்ந்து போகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அளவு […]

error: Content is protected !!