உலகம் செய்தி

ஈரானில் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர். ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே […]

இலங்கை செய்தி

“வடக்கிலுள்ள பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிக்க தடை”

  • March 18, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய […]

உலகம் செய்தி

ஈரானின் உளவுத்துறை அமைச்சரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

  • March 18, 2026
  • 0 Comments

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிபபை Esmaeil Khatib கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இன்று (18) தெரிவித்துள்ளது. ஈரானின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது. இவரின் இழைப்பு ஈரானிய அரசாங்கத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வெகுவாகப் பலவீனப்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது. இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள ‘மத்திய கிழக்கு போர்’!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் Jim Chalmers எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அரசுச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் வரிச் சீர்திருத்தங்கள் போன்ற அதிரடி மாற்றங்களைச் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, எரிபொருள் விலையேற்றம் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும் […]

இலங்கை செய்தி

“1, 930 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்பு: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கைதுகள்”

  • March 18, 2026
  • 0 Comments

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவந்துள்ளது. அத்துடன், 4, 520 கிலோ கஞ்சா, 1, 066 கிலோ ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1, 930 கிலோ ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை […]

இலங்கை செய்தி

இளம் சட்டத்தரணி மரணம்: யாழில் பெரும் சோகம்!

  • March 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி நிகாஷ் நேற்று மாலை 5 மணியளவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதன்போது, தனக்கு நெஞ்சுப் பகுதியில் ஒருவித அசௌகரியம் இருப்பதாகத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இஞ்சித் தேநீர் வழங்கப்பட்ட நிலையில், இரவு 7 […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட் அமைப்பிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட உளவாளிக்கு ஈரானில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டு போரின் போது (12 நாள் போர்) ஈரானின் முக்கிய பாதுகாப்பு இடங்களை படமெடுத்து அவர் வெளிநாட்டிற்கு அனுப்பினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகள் இரகசிய பயிற்சி பெற்ற பின்னரே அவர் இந்த உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

உலகம் செய்தி

இஸ்ரேல்மீது ஈரான் கொத்துக் குண்டு தாக்குதல்: 192 பேர் காயம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் உக்கிர தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மேற்படி கொத்து குண்டு தாக்குதலில் இஸ்ரேலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது. அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” […]

இலங்கை செய்தி

தெற்கில் நால்வரை பலியெடுத்த கோர விபத்து: ஐவரின் நிலைமை கவலைக்கிடம்!

  • March 18, 2026
  • 0 Comments

அம்பலாங்கொடை, கதிர்காமம் பிரதான வீதியில் வீரவில பகுதியில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு இ.போ.ச. SLTB பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை செய்தி

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை

  • March 18, 2026
  • 0 Comments

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை(18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது. ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என […]

error: Content is protected !!