இலங்கை செய்தி

17 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!

  • March 13, 2026
  • 0 Comments

மார்ச் மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன. சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகள்மீதான விவாதங்களும் இடம்பெறவுள்ளன. மத்திய கிழக்கு போர்ச்சூழல் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் பற்றியும் ஆளும் மற்றும் எதிரணிக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறக்கூடும்.

விளையாட்டு

பழி தீர்க்குமா பாகிஸ்தான்?

  • March 13, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (13) நடைபெறுகின்றது. இலங்கை நேரப்படி குறித்த போட்டி இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஆரம்பமாகும். பங்களாதேஷ் சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மிர்புரில் நடந்த முதல் ஆட்டத்தில் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார் ஈரான் இராஜதந்திரி!

  • March 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிற்கான ஈரானின் முன்னாள் தூதுவர் Mohammad Pournajaf, ஈரான் அரசாங்கத்தை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். நீண்ட காலமாகப் இராஜதந்திர சேவையில் பணியாற்றிய இவர், 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த நிலையில் தற்போது அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து, ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த ஈரானிய மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த சில வன்முறைச் சம்பவங்களில் ஈரானியத் தொடர்பு இருப்பதாகக் […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு நெருக்கடி: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதி!

  • March 13, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை உயருவதைத் தடுக்க, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. கடலில் ஏற்கனவே பயணத்தில் இருக்கும் ரஷ்ய எண்ணெய்க்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்று அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் விளக்கியுள்ளார். இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்குப் பெரிய பொருளாதார லாபத்தைத் தராது என்றும், உலகளாவிய தட்டுப்பாட்டைக் குறைக்கவே இது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், பங்குச்சந்தை மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்படும் […]

உலகம் செய்தி

ஈரானின் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

  • March 13, 2026
  • 0 Comments

  ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவை பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் போது, ஒரு பாடசாலை தற்செயலாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இராணுவப் புலனாய்வாளர்கள் எழுப்பியுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கா […]

இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணிக்கு திகதி நிர்ணயம்!

  • March 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டது. […]

இலங்கை செய்தி

திருமலையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது!

  • March 13, 2026
  • 0 Comments

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டார். திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணை குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக இரண்டு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை […]

செய்தி

மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகன்: யாழில் பயங்கரம்!

  • March 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டிப் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மருமகன் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வடமராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: கரவெட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த அரச உத்தியோகத்தர், தனது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்போது தனது இரண்டு பிள்ளைகளையும் ஓர் […]

இலங்கை செய்தி

யாழில் கோர விபத்து: பிரான்ஸ் தம்பதியினர் உட்பட நால்வர் படுகாயம்!

  • March 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (12) காலை ஊர்காவல்துறை நோக்கி பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ” பிரான்ஸ நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாண பக்கம்நோக்கி திருப்புவதற்கு முற்பட்டவேளை, பின்னால் வந்து கார் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பிரான்ஸ் […]

இலங்கை செய்தி

யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை!

  • March 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் , அவை இரவு வேளைகளில் வீதியோரங்களில் நடமாடி வருகின்றன. அவ்வாறு வீதியில் நடமாடிய வேளையிலையே வீதியில் சென்ற கனரக வாகனம் முதலை மீதேறியதில் முதலை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுறது.

error: Content is protected !!