ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை: NPP அரசு திட்டவட்டம்!
“பொருளாதார வீழ்ச்சி, இனவாதம் என்பவற்றை வைத்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என சிலர் நினைக்கின்றனர். அது பகல் கனவு மாத்திரமே. எமது ஆட்சியை குறுக்கு வழியில் கவிழக்க முடியாது.” – என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டுவருகின்றது. மக்களுக்கான சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டில் வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதி ஒரு சில எதிரணி […]













