வெளிநாட்டு ராஜதந்திரிகளைச் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இம்முடிவு […]













