இலங்கையில் மின்சாரக் கட்டணமும் அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டனர். இதற்கமைய மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண உயர்வு கோரப்பட்டிருந்தது. எனினும், பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம், ஏற்றுமதி வணிகம் உடப்ட […]













