“சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் இன்று (16) களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த அணுகுமுறையுடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் Sunil Handunnethi. தலைமையில் இன்று மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் […]
ஈரான் தனது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சு நடத்த முடியும் என்று கத்தார் வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் முன்மொழிந்த விசாரணைக் குழுவை நிராகரித்த கத்தார், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தோஹாவில் உள்ள குடியிருப்பு மண்டலங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை அச்சுறுத்தல்களே சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகளுக்கு முக்கிய காரணமாகும். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த பதற்றத்தைத் […]
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் ‘பிரதான சூத்திரதாரி’ யார் என்பது குறித்த தகவலை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெளிப்படுத்தவுள்ளேன்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில Udaya Gammanpila அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை ‘நேட்டோ போர்’ Nato war கிடையாது என்று பிரிட்டன் அமைச்சர் Pat McFadden சுட்டிக்காட்டினார். நேட்டோ Nato அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று தாக்கப்பட்டால் அதற்கு எதிராக அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என 5 ஆம் சரத்தில் (Article 5) குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மேற்படி கொள்கை, இது போன்ற தன்னிச்சையான போர்களுக்குப் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். கூட்டணி நாடுகளைக் […]
ஈரானுடனான போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் தனது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் , Gen Nick Carter தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் இத்தகைய இராணுவ நடவடிக்கை பிரிட்டனின் தேசிய நலனுக்கு மிகவும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய கடற்படையின் பலத்தை விட புரட்சிகர காவல்படையின் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற நவீன […]
“நாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றின்போது ஜே.வி.பியினர் பொறுப்பற்ற விதத்திலேயே செயல்பட்டனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், தாம் தற்போது எதிரணியில் இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam கூறினார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டவேளை அதனை வைத்து ஜே.வி.பியினர் அரசியல் செய்தனர். […]
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பயணிப்பதற்கு நட்பின் அடிப்படையிலேயே ஈரான் அனுமதி வழங்கியது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar தெரிவித்தார். இது தொடர்பில் பிரதிபலனாக ஈரான்எதையும் பெறவில்லை எனவும் அவர் கூறினார் ‘‘ உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ்நீரிணை வழியாகவே நடைபெறுகின்றது. எனவே, இந்த பாதையை மீண்டும் திறக்கப்படுவதற்காக ஈரானுடன் இந்தியா பேச்சுசு நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்பை துண்டித்துக் கொள்வதைவிட, அவர்களுடன் பேசுவதும், புரிந்து […]
கென்ட் Kent பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். குறித்த நோய்த்தொற்று கேன்டர்பரி பகுதியில் பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய் பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இணைந்து சுமார் 30 ஆயிரம் பேருக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையை […]
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பல துறைகளும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு நாளாந்த தேவைக்காக கிடைக்கப்பெறும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பதற்றத்தில் மக்கள் எரிபொருளை அதிகளவு சேகரிக்க முற்படுவதால் பல நகரங்களில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முன்கூட்டியே முடிந்துள்ளன. கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிகளும் போக்குவரத்துகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு தனது அவசரக்கால கையிருப்பைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. நிலைமையைச் […]