இலங்கை செய்தி

முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தை ஒப்படைக்குமாறு ஜே.வி.பிக்கு உத்தரவு

  • March 31, 2026
  • 0 Comments

கம்பஹா, யக்கலவிலுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் Frontline Socialist Party அலுவலகத்தை, ஜே.வி.பி JVP கைப்பற்றியது சட்டவிரோதம் என கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், குறித்த அலுவலகத்தை முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பஹா மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என, முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். மேற்படி அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னிலை சோசலிசக் கட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த […]

உலகம் செய்தி

“மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம்”

  • March 31, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக சவுதி அரேபியாவிடம் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Seyed Abbas Araghchi  வலியுறுத்தியுள்ளார். சவுதி அரேபியாவை ஒரு சகோதர நாடாக மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் அரபு மக்களுக்கு மதிப்பளிக்காத வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை மட்டுமே குறிவைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க விமானப்படையின் சேதமடைந்த விமானம் போன்ற ஒரு புகைப்படத்தைப் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அமெரிக்காவின் வான்வழி கட்டளை மையத்தை ஈரான் அழித்துவிட்டதாகக் கூறியுள்ளார். […]

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு சுங்கவரி: ஈரான் புதிய திட்டம்!

  • March 31, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கமைய ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமன் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய நடைமுறையானது, பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பையும் வருவாயையும் இலக்காகக் கொண்டுள்ளது. போர்க்காலச் சூழலால் இந்த […]

செய்தி விளையாட்டு

IPL: PBKS, GT அணிகள் இன்று மோதல்!

  • March 31, 2026
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் உள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

விளையாட்டு

மண்கவ்வியது CSK!

  • March 31, 2026
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings அணி தனது முதல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களைப் பெற்றது. […]

இலங்கை செய்தி

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

  • March 31, 2026
  • 0 Comments

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ Andrey Rudenko இன்று (31) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் கொழும்பு வருகின்றார். இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதியையும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட […]

உலகம் செய்தி

“மக்களைவிட பயங்கரவாதக் குழுக்களே ஈரான் அரசுக்கு முக்கியம்”

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான் அரசு தனது நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு, பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்க்கோ ரூபியோ Marco Rubio விமர்சித்துள்ளார். ஈரான் தமது பொருளாதாரம் மற்றும் நீர் மேலாண்மையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்காக தனது செல்வத்தைச் செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சரியான நேரத்தில் தகுந்த தூதரக முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், தற்போது நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம் எனவும் Marco Rubio […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

  • March 30, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 2027 ஏப்ரல் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் கீழ் 262 தனிநபர்கள் மற்றும் 53 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.தனிநபர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு சாதனங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தற்போது அனுமதிப்பதில்லை. ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது குடிமக்கள் இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்கவும் […]

உலகம் செய்தி

ஈரானில் பிரிட்டன் படை களமிறங்காது: பிரதமர் திட்டவட்டம்!

  • March 30, 2026
  • 0 Comments

தமது நாட்டு படையினரை ஈரானுக்கு அனுப்பபோவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் Keir Starmer தெரிவித்தார். பிராந்தியத்தில் உள்ள தற்காப்பு நலன்களையும் நட்பு நாடுகளையும் பாதுகாப்பதே பிரிட்டனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் ஈரான் தொடர்பான இலக்குகளைத் தாக்க அமெரிக்காவிற்குத் தனது படைத்தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யத் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’ – அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை: ஈரான்

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்கா விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றவை மற்றும் வரம்பு மீறியவை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் Esmaeil Baghaei தெரிவித்தார். தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், எனினும், அமெரிக்கா தனது கருத்துக்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்டை நாடுகளின் அமைதி முயற்சிகளை ஈரான் மதித்தாலும், […]

error: Content is protected !!