கோட்டாபய தப்பியோட எவ்வளவு செலவானது? தகவல்களை வெளியிட உத்தரவு!
மக்கள் புரட்சியின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றது தொடர்பான செலவீனங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி, கடற்படை தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தத் தகவலை வெளியிடுவது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று […]













