பொழுதுபோக்கு

சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்.. சூப்பர் அப்டேட் இதோ….

கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

நடிகர் சூர்யா இந்த படத்தில் சாக்லேட் பாய் கணவராகவும் ரக்கெட் பாய் லவ்வராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். படத்தின் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆனது.

அதைத்தொடர்ந்து ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அடுத்ததாக ஒபேலி N கிருஷ்ணா, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதைக்களம் என்ன? என்னென்ன நடிகர்கள் நடிக்கபோகிறார்கள் குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை.

ஆனால் இப்படம் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இதில் நடிகர் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content