பொழுதுபோக்கு

11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார்.1

இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர் மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யிடம் படத்தின் ஒன்லைனை ஷங்கர் கூறியதாகவும், இது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு பிறகு ஷங்கர் இப்படத்தின் முழு ஸ்க்ரிப்ட் பணிகளை முடிக்கவுள்ளதாகவும், இப்படம் ‘தளபதி 69’ அல்லது ‘தளபதி 70’ படமாக இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஷங்கர் இணையவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content