இலங்கை

இலங்கையில் தனது மகனை கொலை செய்ய முயன்ற தந்தையால் பரபரப்பு!

  • October 12, 2025
  • 0 Comments

தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்றதாகக் கூறப்படும் தந்தையொருவரை ஆரச்சிகட்டுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்குச் சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இதன்போது ​​சந்தேக நபர் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை கைவிட்டு வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவர் வெளியேறும் போது, ​​அவரது மகனுக்கு நான்கு வயதுதான் […]

பொழுதுபோக்கு

“2 வருடங்களுக்கு வர மாட்டேன்” அரவிந்த் சாமி எடுத்த திடீர் தீர்மானம்

  • October 12, 2025
  • 0 Comments

90’s காலக்கட்டத்தில் சாக்கலேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் அரவிந்த் சாமி. பெயருக்கும் நபருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பார். தமிழ் பெயரை வைத்துக்கொண்டு, பாலிவூட், ஹாலிவூட் நடிகரைப்போல் இருப்பது தான் ஹைலைட். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த இவர் இடையில் திடீரென காணாமல் போனார். பின் தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்தார். இவர் ஆரம்பித்து வைத்த நெகடிவ் ரோலைத்தான் தற்போது பல முன்னணி ஹீரோக்களும் கையில் எடுத்துள்ளனர். இதையடுத்து தற்போது மீண்டும் அரவிந்த் […]

உலகம்

ஹமாஸின் சுரங்கபாதைகளில் எஞ்சியவற்றையும் அழிக்க இஸ்ரேல் திட்டம்!

  • October 12, 2025
  • 0 Comments

காசாவில் ஹமாஸால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் எஞ்சியவற்றையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா தலைமையிலான “சர்வதேச பொறிமுறையின்” கீழ் இந்த நடவடிக்கை நடத்தப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட  பிறகு இஸ்ரேலின் மிகப்பெரிய சவால் காசாவில் உள்ள அனைத்து ஹமாஸ் பயங்கரவாத சுரங்கப்பாதைகளையும் அழிப்பதாகும்” என்று இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நீடித்த […]

இலங்கை

மாத்தளையில் நீர்த்தேக்கம் ஒன்றின் அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்ட 800 தோட்டாக்கள்

  • October 12, 2025
  • 0 Comments

மாத்தளையில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து சுமார் 800 வெடிக்கும் தன்மையுள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்தொழிலாளி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. T 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட தோட்டாக்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம்

தாலிபான் நடத்திய தாக்குதல்களில் 58 பாகிஸ்தான் வீரர்கள் பலி – மூடப்பட்ட எல்லை

  • October 12, 2025
  • 0 Comments

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பாதைகளை மூடியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை (11) அன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையோரப் பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் தலிபான் படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது […]

ஐரோப்பா

பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பேச்சுவார்த்தை

  • October 12, 2025
  • 0 Comments

உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ், சனிக்கிழமை(11) தலைநகர் கீவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணையமைச்சர் ரீம் அல்-ஹாஷிமியை சந்தித்து, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்த ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். 2022 முதல் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான மனிதாபிமான ஆதரவிற்கும், கைதிகள் பரிமாற்றம் மற்றும் நமது குடிமக்கள் திரும்புவதற்கான விஷயங்களில் உதவியதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்தேன் என்று உமெரோவ் X இல் பதிவிட்டார். […]

இலங்கை

இலங்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை உயர்த்த ஜனாதிபதி உறுதி!

  • October 12, 2025
  • 0 Comments

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை  1,750 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். பண்டாரவளையில் நடைபெற்ற மலையகம் சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இந்த மலையகம் சமூகம் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. அவர்கள் 202 ஆண்டுகளாக வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒரு அரசாங்கமாக, அவர்களுக்கு அடிப்படைத் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

22ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரவீனா… வைரலாகும் படங்கள்

  • October 12, 2025
  • 0 Comments

சின்னத்திரையில் மக்கள் மனதை கவர்ந்த நடிகைகளில் ரவீனாவுக்கும் ஒரு தனி இடம் உண்டு. இவர் சிறு வயது முதல் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றார். மேலும் விஜய்யின் ஜில்லா படத்தில் நடித்துள்ளார். இவருக்கு விஜய்யின் மகனுடனும் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. என்னதான் படங்கள், சின்னித்திரை நாடகங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழ் தேடித்தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் – 2 சீரியல் தான். இன்றளவு ரவீனாவை சக்தியாக கொண்டாடுகின்றார்கள். இதையடுத்து விஜய் டிவியில் […]

உலகம்

ட்ரம்பின் வரி விதிப்பு எச்சரிக்கைக்கு இணங்க மறுக்கும் சீனா!

  • October 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கைக்கு சீனா அடிப்பணிய மறுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் ட்ரம்ப் தீர்வு காண வேண்டும் என சீனா  வலியுறுத்தியுள்ளது. சீனாவின் நிலைப்பாடு நிலையானது” என்று வர்த்தக அமைச்சகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது. அரிய மண் ஏற்றுமதி மீது சீனா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்த பிறகு ட்ரம்ப் வரி விதிப்பு எச்சரிக்கையை […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் பாலஸ்தீன ஆதரவு பேரணி : போர்நிறுத்தம் குறித்து சந்தேகம்

  • October 12, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியுள்ளனர். சிட்னி ஓப்ரா ஹவுசில் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் இந்த வாரம் தடை விதித்ததைத் தொடர்ந்து இப் பேரணி இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முழுதும் மெல்பர்ன், சிட்னி உட்பட பல்வேறு நகரங்களில் இன்று (12) மட்டும் 25க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. சிட்னிப் பேரணியில் 30,000 பேர் கலந்துகொண்டதாக அதற்கு ஏற்பாடு செய்த பாலஸ்தீன நடவடிக்கைக் குழு தெரிவித்தது. அமெரிக்கா முன்னெடுத்துள்ள காஸா அமைதித் திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி […]

error: Content is protected !!