செய்தி

தாவும் அரசியல் தேவையில்லை – எதிரணிக் கூட்டிலிருந்து மக்கள் போராட்ட முன்னணி விலகல்

  • October 31, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்குத் தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி கூட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படுமா என மக்கள் போராட்ட […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

  • October 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதிச் சீட்டைத் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறையை அரசு நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார். இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கான EAD […]

ஐரோப்பா செய்தி

விண்ட்சர் ( Windsor) வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆண்ட்ரூ (Andrew)!

  • October 31, 2025
  • 0 Comments

பிரிட்டனின் மன்னர் சார்லஸ் (Charles), தனது தம்பி ஆண்ட்ரூவின் (Andrew) இளவரசர் பட்டத்தை பறித்து, தனது விண்ட்சர் (Windsor)வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று தெரிவித்துள்ளது. சார்லஸின் தம்பியும், மறைந்த ராணி எலிசபெத்தின் (Charles) இரண்டாவது மகனுமான 65 வயதான ஆண்ட்ரூ (Andrew) , சமீபத்திய ஆண்டுகளில் தனது நடத்தை மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான (Epstein) தொடர்புகள் காரணமாக பெருகிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அவர் யார்க் டியூக் ( […]

ஐரோப்பா செய்தி

இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள் – இரவு முழுவதும் பதற்றத்தில் போலந்து!

  • October 31, 2025
  • 0 Comments

ரஷ்யா  650 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சபோர்ஜியாவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஏவுகணைகள் போலந்தின் எல்லையை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டை தற்காத்துக்கொள்ள போலந்தும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. கின்சல் வான்வழி ஏவுகணைகள் Kinzhal air-launched missiles, பாலிஸ்டிக் வெடிக்கும் ஆயுதங்கள் ballistic […]

கருத்து & பகுப்பாய்வு

வியாழன் கிரகத்திற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் – பூமியைப் பாதுகாக்கும் காவலன்

  • October 31, 2025
  • 0 Comments

சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன் (Jupiter), ஒரு புதிய ஆய்வில் விண்வெளிச் சூப்பர் ஹீரோ  என்று கண்டறியப்பட்டுள்ளது. பூமியை உருவாக்கக் காரணமாக இருந்த வியாழன் பல வியக்கவைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளதாக, ரைஸ் பல்கலைக்கழக (Rice University) விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானபோது வியாழன் கோள் மிக வேகமாகப் பெரிதானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழனின் பிரம்மாண்டமான ஈர்ப்பு விசை, உள்ச் சூரியக் குடும்பத்தை […]

உலகம்

அமெரிக்காவில் அதிர்ச்சி! ஆய்வகத்திலிருந்து தப்பிய கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குகள்

  • October 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பெரிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு லொரி விபத்துக்குப் பிறகு, பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 3 ரீசஸ் குரங்குகள் ஆய்வகத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரீசஸ் குரங்குகளை ஏற்றிச் சென்ற லொரி கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள டூலேன் பல்கலைக்கழகத்திலிருந்து குரங்குகள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹெபடைடிஸ் சி (Hepatitis C) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! நாள் ஒன்றுக்கு 3.5 பில்லியன் பயனர்கள்

  • October 31, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) தனது நிதிசார் அறிக்கைகளை மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மெட்டா செயலியைப் பயன்படுத்துவதாக, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தற்போது மாதாந்திரம் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைத் தாண்டி இன்ஸ்டாகிராம் செயலி சாதனை படைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads) செயலி நாளாந்தம் 150 மில்லியன் பயனர்களைத் தாண்டியுள்ளது. இந்த வருடத்தின் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து பெருந்தொகையானவர்கள் நாடு கடத்தல்

  • October 31, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 17,651 பேர் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே மாத காலப்பகுதியில் நாடுகடத்தப்பட்டோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு நாடுகடத்தப்பட்டோரின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாக இருந்தது. அரசாங்கம் நாடுகடத்தல் விதிகளை எளிதாக்கிய பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகடத்தல்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1,614 பேர் வரை அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் […]

இலங்கை செய்தி

எதிர்பார்ப்புகளை விட அதிகளவில் வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வலுவடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 3.1 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கையால் முடியக்கூடும் என நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலின் (Thomas Helbling) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் ஆசிய பசுபிக் பிராந்தியம் தொடர்பான பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டத்தை வெளியிட்டுப் பேசினார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் அமுலாக்கும் பரந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் […]

இலங்கை செய்தி

இலங்கை: போலி சோதனை நடத்தி பணம் திருடிய மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது

  • October 30, 2025
  • 0 Comments

கொழும்பில் ரூ.102 மில்லியன் திருட்டு குற்றச்சாட்டில் கலால் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகள் 2025.06.05 அன்று கொழும்பு, செட்டியார்(Chettiar) தெருவில் உள்ள இரண்டு தங்க ஆபரணக் கடைகளில் அதிகாரப்பூர்வ சோதனை நடத்துவதாகக் கூறி பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சட்டபூர்வமான சோதனை நடத்துவது போல் இரு தங்க ஆபரணக் கடைகளுக்கு சென்று, அங்கிருந்து 102 மில்லியன் பணத்தை […]

error: Content is protected !!