இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அர்பணிப்புடன் இருக்க வேண்டும் – கிறிஸ்டலினா ஜோர்ஜுவா!
இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை பணவீக்க உத்தி குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது உயா பணவீக்கத்திற்கு மந்தியில் கடும் மந்த நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் குறைந்துபோயுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நீடித்து நிலைக்க […]













