வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சி கொடுத்த முதியவர்
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். […]













