ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தடுமாற்றத்துடன் பதிலளித்த பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு தடுமாற்றதுடன், பதிலளிப்பது அமெரிக்கர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) இல் நடைபெறவுள்ளது. இதற்காக பைடன் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சிகாகோ சென்றிருந்த அவரிடம், உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் வாக்னர் படையினர், திடீரென மொஸ்கோவிற்கு எதிராக திரும்பினர். இதனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பலவீனமடைந்துள்ளரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பைடன், ‘உண்மையில் சொல்வது கடினம். […]













