இலங்கை

கடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

  • July 2, 2023
  • 0 Comments

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை ஜனரஞ்சக முடிவுகளாக மாற்றுவது பொதுஜன பெரமுனவின் பொறுப்பு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணையை நிராகரித்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் தீர்மானங்கள் ஜனரஞ்சகமானதாக இருக்க வேண்டும். கடனை மறுசீரமைப்பது சரி. அது நியாயமானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்த நாட்டின் பொருளாதாரத்தை […]

இலங்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து ஒரு மணித்தியாலம் பத்து நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார். சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் காலை விமான சேவையுடன், வாரத்தில் நான்கு நாட்கள் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இன்று, பன்னிரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு சிறிய விமானம், செஸ்னா 208, பயணத்தில் இணைந்துகொண்டது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் […]

இந்தியா

காதலியின் வீட்டில் சடலமாக தொங்கிய நபர்! – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

  • July 2, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால். இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. பின்னர் காதலர்கள் இருவரும் இரவில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். ஆனால், இதனை அறிந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இக்பால் அவரது […]

ஐரோப்பா

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயன்ற இருவர் கைது!

  • July 2, 2023
  • 0 Comments

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா செல்ல முயன்ற இருவர்   லார்னாகா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும், ஆள்மாறாட்டம் செய்து பிறிதொருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளியேற முற்பட்டது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த சம்பவம் வலுவான கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளையும், முக்கயத்துவத்தையும் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சைப்ரஸில் சட்டப்பூர்வமாக வசிக்கும் மூன்றாம் நாட்டுப் பிரஜையான 24 வயதான நபர் ஐரோப்பிய கடவுச்சீட்டை வைத்திருந்ததில் சந்தேகம் […]

உலகம்

வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்வதற்கு இரகசிய சதி திட்டம்? உக்ரைன் புலனாய்வு பிரிவு

வாக்னரின் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினைக் கொல்ல ரஷ்யா சதித் திட்டம் தீட்டியதாக உக்ரைன் உளவுத் துறையின் தலைவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியதை தொடர்ந்தே அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவரை கொல்லும் பணியை ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பான விஎஸ்பி பணித்துள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய புலனாய்வுப் […]

உலகம்

டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • July 2, 2023
  • 0 Comments

டோங்காவில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நகரின் மற்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை

விபத்தில் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வரும்,மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர். மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ,சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு 25 இலட்சம் மக்களின் சாபம் சென்றடையும் – சாணக்கியன்!

  • July 2, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்சம் மக்களின் சாபம் சென்றடையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேசிய கடன்மறுசீரமைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடிதான்  முதலாவது மோசடி எனக் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் […]

புகைப்பட தொகுப்பு

தேரேறி வருகின்றாள் நயினாதீவு – நாகபூசணி அம்மன்…. அலைகடலென திரண்ட மக்கள்

  • July 2, 2023
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை […]

இலங்கை

திருகோணமலையில் கரடி தாக்கி மூவருக்கு நேரந்த கதி!

திருகோணமலையில் ஒரே தடவையில் கரடி மூன்று பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று இன்று (01) பதிவாகியுள்ளது. திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்றபோது கரடி ஒருவரை தாக்கிய சந்தர்ப்பத்தில் மற்றைய இருவரும் அக்கரடியை தாக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கரடி மூன்று பேரையும் தாக்கி காயப்படுத்திய நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து குறித்த மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் […]

error: Content is protected !!