லிபியாவில் இருந்து புறப்பட்டு நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 30 புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த துயரம் !
47 புலம்பெயர்வாளர்களுடன் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததால், அந்தப் படகில் பயணித்த 30 பேர் பரிதாபமாக பலியாகிய துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. லிபியாவிலிருந்து 47 புலம்பெயர்வோருடன் புறப்பட்ட படகு ஒன்று மத்தியதரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.Benghazi என்ற இடத்துக்கு 110 மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகு கவிழ்ந்துள்ளது. Alarm Phone என்னும் தொண்டு நிறுவனத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே, அவர்கள் இந்த தகவலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்கள்.உடனே, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த FROLAND என்னும் […]












