பிரித்தானியாவில் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய தமிழர்
பிரித்தானியாவில் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிய தமிழர் ஒருவரை கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் தமிழரொருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்ற போது நீல நிற டிராக்சூட்டில் இருந்ததாகவும், இவர் மிகவும் ஆபத்தானவர் என்பதனால் அவரை யாரும் நெருங்க வேண்டாம் எனவும் மாநகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சந்தேகநபரை அடையாளம் காண […]













