உக்ரைன் தோற்றால் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் – போலந்து எச்சரிக்கை!
உக்ரைன் தோற்கடிக்கப்பட்டால் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்த ஊக்குவிக்கப்படும் என போலந்து பிரதமர் Mateusz Morawieck தெரிவித்துள்ளார். இன்று வாஷிங்டனில் நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். போருக்கும் தைவானின் நிலைமைக்கும் இடையே நிறைய இணைப்புகள், நிறைய ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றைக் காண்கிறேன் என்று அவர் கூறினார்.













