கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கியுள்ள நியூசிலாந்து விமானி; மீட்க சென்ற 13 ராணுவ வீரர்கள் படுகொலை
இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அவர்களை ஒடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என தொடர்ந்து அந்த கிளர்ச்சி படை கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால், கடந்த 2 மாதங்களாக இதுபற்றி எழுதி வந்த கடிதங்களும் புறக்கணிக்கப்பட்டன. இதன்பின், […]













