ஐரோப்பா

தனியார் வாக்னர் குழுவிற்கு தடை விதித்த சுவிஸ் அரசாங்கம்!

  • April 20, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்து தனியார் இராணுவ வாக்னர் குழுவையும் RIA FAN என்ற செய்தி நிறுவனத்தையும் ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் பட்டியலில் சேர்க்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவித்தலை சுவிஸ் பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை இன்று தெரிவித்துள்ளது. குறித்த தடை இன்று  மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக ஏராளமான பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தைக் கடந்தது!

  • April 20, 2023
  • 0 Comments

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12, 591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி இருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பு விகிதம் 5.46 சதவீதமாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 5.32 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து […]

ஆப்பிரிக்கா

போர் நிறுத்தத்தையும் மீறி சூடானில் மோதல்!

  • April 20, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் இராணுவத்துக்கும்,  துணை இராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள். உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது. இந்த […]

இலங்கை

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

  • April 20, 2023
  • 0 Comments

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். கண் சத்திர சிகிச்சைகள் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர […]

ஐரோப்பா

ஜபோர்ஜியா அணுவாலையில் அமெரிக்காவின் எரிபொருள் பயன்பாட்டை நிறுத்த திட்டம்!

  • April 20, 2023
  • 0 Comments

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோவின் படைகள் கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணுமின் நிலையத்தை முதலில் ரஷ்யா பயன்படுத்தியது. பின்னர் அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸிலின் கைக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு, ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்ததால் ஆலையைக் கையகப்படுத்தியது மற்றும் அதன் அருகே தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால் அணுசக்தி பாதுகாப்பு நெருக்கடியின் மையத்தில் இருப்பதாக குற்றம் […]

ஐரோப்பா

தானிய இறக்குமதியால் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்கு 100 மில்லியன் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • April 20, 2023
  • 0 Comments

தானிய இறக்குமதி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் எல்லையில் உள்ள ஐந்து நாடுகளுக்கு 100 மில்லியன் இழப்பீடாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதித் தொகை உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள ஐந்து நாடுகளின் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கடந்த வார இறுதியில் போலந்தும் ஹங்கேரியும், உக்ரைனில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விததித்தன. பின்னர்,  மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இவ்விரு நாடுகளை பின்பற்றி தானிய இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்தன. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு […]

வாழ்வியல்

வெயில் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க இலகுவான வழி

  • April 20, 2023
  • 0 Comments

ஆசிய உட்பட உலக நாடுகளை தற்போது அச்சுறுத்த ஆரம்பித்துள்ள அதிக வெப்பமான காலநிலையில் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பலரும் போராடி வருகின்றனர். சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு ரோஸ் வாட்டர் தவறாமல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்ககலாம். பொதுவாகவே இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த வெயில் காலத்தில் நமது சரும ஆரோக்கியத்தை […]

இலங்கை செய்தி

இலங்கையில் எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்!

  • April 20, 2023
  • 0 Comments

இலங்கையில் எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பழுப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவென என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த சில […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுவர்களுக்கு ஆசிரியர் செய்த மோசமான செயல்

  • April 20, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். Yvelines நகரில் வசிக்கும் குறித்த ஆசிரியர், தன்னிடம் பியானோ இசைக்கருவி பயில வரும் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான ஆண்டுகளில் பல்வேறு மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய்யுள்ளார். குறித்த ஆசிரியர் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக கடந்த ஏப்ரல் 14 […]

ஆஸ்திரேலியா

கழிப்பறைகளால் ஏற்பட்ட சிக்கல் – புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய விமானம்

  • April 20, 2023
  • 0 Comments

ஆஸ்திரேவியாவில் உள்ள வியென்னாவில் இருந்து நியூயோர்க் சென்ற விமானம் ஒன்று 2 மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது. விமானத்தினுள் இருந்த 8 கழிப்பறைகளில் 5 அடைத்துக்கொண்டதே அதற்குக் காரணமாகும். திங்கட்கிழமை 300 பேரை ஏற்றியிருந்த அந்த Boeing 777 ரக விமானம், 8 மணி நேரம் பயணம் செய்திருக்கவேண்டியது. ஆனால் கழிப்பறைகளில் ஏற்பட்ட சில கோளாறுகளால் விமானத்தை வந்த இடத்துக்குத் திருப்பிவிட முடிவெடுக்கப்படுக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார். ஆஸ்திரிய விமானங்களில் இதுவரை […]

error: Content is protected !!