இலங்கை

பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய மூன்று ஆசிரியர்கள்!

  • April 21, 2023
  • 0 Comments

மஹா ஓயாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 19 வயதுடைய மாணவனை தாக்கிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை ஆசிரியர்கள் பலரால் தாக்கப்பட்டதையடுத்து தனது குழந்தை மாயா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 37 மற்றும் 43 வயதுடைய மஹா ஓயா மற்றும் பதியத்தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதான ஆசியர்கள் இன்று தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தென் அமெரிக்கா

பெருவில் மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த 40 வயது நபர்!

  • April 21, 2023
  • 0 Comments

பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளியில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார். ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கழிவறைக்குள் சென்ற மாணவிகளில் ஒருவர், உள்ளே மாணவிகள் போன்றே சீருடை, இரட்டை ஜடை மற்றும் மாஸ்க் அணிந்த நபர், கழிவறையில் இருந்ததைக் கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளார். இதன்போது பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், அந்த நபரை சூழ்ந்து […]

இலங்கை

அதிக வெப்ப நிலையுடனான காலநிலை மே இறுதிவரை நீடிக்கும் என அறிவித்தல்!

  • April 21, 2023
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக மனநலம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் தெரிவித்துள்ளார். குறித்த வெப்ப காலநிலையாது  மே மாத இறுதி வரை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  அதிக வெப்ப நிலை காரணமாக குறிப்பிட்ட சில நோய் […]

ஐரோப்பா

ஆப்ராம்ஸ் டாங்கிகளுடனான பயிற்சியை ஆரம்பிக்கும் உக்ரைன்!

  • April 21, 2023
  • 0 Comments

உக்ரைன் படைகளுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளுடனான  பயிற்சியை அமெரிக்கா தொடங்க உள்ளது வரும் வாரங்களில்  இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மே மாத இறுதியில் ஜெர்மனியில் உள்ள கிராஃபென்வோஹ்ர் பயிற்சிப் பகுதிக்கு 31 டாங்கிகள் கொண்டுவரப்படும் எனவும்,  இரண்டு வாரங்களுக்குப் பிறகு துருப்புகள் பயிற்சியை தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. குறித்த பயிற்சி நடவடிக்கையானது  10 வாரங்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை

வருடத்திற்கு 12 இலட்சத்திற்கும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

  • April 21, 2023
  • 0 Comments

வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்தோ www.ird.gov.lk  என்ற  இணையதளத்தின் ஊடாகவோ  தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

தாய்லாந்தில் ஏமாற்றப்படும் இலங்கையர்கள் : தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

  • April 21, 2023
  • 0 Comments

போலி நிறுவனங்கள் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் வேலைவாய்ப்பு என தெரிவித்து இலங்கையர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக  தாய்லாந்திற்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவ்வாறான போலி நிறுவனங்கள் இலங்கையர்களை தாய்லாந்து எல்லை ஊடாக மியன்மார் போன்ற நாடுகளிற்கு கொண்டு சென்று அடிமையாக வைத்திருந்து,   வேலை வாங்குவதாகவும்  தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மியன்மாரிற்குள் கொண்டு செல்லப்பட்ட இலங்கையர்கள் சிலர்  சட்டவிரோதமாக நுழைந்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவை தொழில்விசாவாக மாற்றிதருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே […]

இலங்கை

மைத்திரியை சிறையில் அடைக்க வேண்டும் – சரத் பொன்சேகா!

  • April 21, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், இழப்பீடு செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போதாது என்றும் அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 21 ஆம் திகதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்இ பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேலியகொடையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் பலவீனமான ஆட்சியாளர்களும்,  பாதுகாப்பு படை பிரதானிகளும் […]

ஐரோப்பா

பசிபிக் கடற்பகுதியில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்ட ரஷ்யா!

  • April 21, 2023
  • 0 Comments

ரஷ்யா தனது பசிபிக் கடற்படை, கப்பற்படையை திடீர் ஆய்வு செய்து முடித்துள்ளதாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, பயிற்சியில் 25,000 வீரர்கள், 89 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 167 கப்பல்கள் ஈடுபட்டன. ஆய்வில் ஈடுபட்டிருந்த பசிபிக் கடற்படையின் அனைத்து துருப்புகளும் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தன என்று அமைச்சகம் மேலும் கூறியது. இந்த ஆய்வு நடவடிக்கைகள்,  ம் கடலில் இருந்து  எதிரியின் ஆக்கிரமிப்பைத் தடுக்க படைகளின் உயர் தயார்நிலை […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பிரதி பிரதமர் டொமினிக் ராப் பதவி விலகினார்!

  • April 21, 2023
  • 0 Comments

பிரிட்டனின் பிரதி பிரதமர் டொமினிக் ராப்  பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொமினிக் ராப் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டார் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடம்டொலி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தொடர்ந்து நான் பதவி விலகுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் நானே விசாரணைகளிற்கு அழைப்பு விடுத்தேன் விசாரணை முடிவுகளை அடிப்படையாக வைத்து இராஜினாமா செய்ய தயார் என அறிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். […]

வட அமெரிக்கா

வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்

  • April 21, 2023
  • 0 Comments

வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையம் பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் மேலும் தெரிவிக்கையில், வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அதேவேளை, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் […]

error: Content is protected !!