மீண்டும் மின் கட்டண திருத்தம்
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை மீளாய்வு செய்து திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை மீளாய்வு செய்து திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா இன்று உடலநலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் 1980களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலாவும் ஒருவர். ஆகாய கங்கை படத்தில் ஆரம்பித்து 2002ல் வெளியான நைனா படம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளதுடன் , 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோபாலாவின் […]
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் வெசாக் பண்டிகை கசோன் எனும் பெயரில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று விடுவிக்கப்பட்ட கைதிகள் பலர், சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்த தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்துகொண்டனர். 2021 பெப்ரவரியில் மியன்மாரில் இராணுவப் புரட்சி நடத்தப்பபட்ட பின்னர் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது […]
இலங்கையில் மின்சார கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பனவற்றுக்கான விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இவ்வாறு கட்டணங்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மின்சார கட்டணம் அதிகரிப்பு காரணமாக நாட்டில் மின்சார பயன்பாடு சுமார் 20 சதவீதம் குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை நடைபெற்ற காலத்தில் எட்டு கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் […]
2023 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா மற்றும் பாண்டி உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அரசாங்கத்தினால் உரம் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை தீர்மானித்தவாறு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உரம் கொள்வனவு செய்வதற்கு 01 ஹெக்டேருக்கு 20,000 ரூபாவும் […]
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகின்றது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,638 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,462 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக […]
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் மூலம் […]
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்து உள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன. சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, […]
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சார்ந்தவர் ஆ.பழனியப்பன்((54), கட்டட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், சிரிராம் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23:12:2023 அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு(75) உணவு வழங்கசென்றுள்ளார். அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்மநபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த தங்க நகை 3 1/4 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து […]
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும்,பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹர ஹர சங்கரா சிவாய […]