மாணவியின் காலணியை கழற்றிச் சென்ற நபர்
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு வயது மாணவியின் காலணியை சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக கழற்றியுள்ளார். நேற்று (16ம் திகதி) காலை 7.00 மணியளவில், மாணவி வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒருவர் அவரை பிடித்து, மாணவி அணிந்திருந்த காலணிகளில் ஒன்றை கழற்றியுள்ளார். அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பகொட பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.













